Salary Hike: 90% இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பு! ஊதியம் உயரும் என நம்பும் இந்திய பணியாளர்கள்

Indians Expectation Of Salary Hike: கொரோனாவுக்கு பிறகு மீண்டெழும் பணியாளர்களின் நம்பிக்கைகள்; ’இந்த வருசம் கண்டிப்பா சம்பளம் அதிகமாகும்’ என 90% இந்தியர்கள் நம்புகின்றனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 25, 2023, 10:39 AM IST
  • இந்த வருசம் கண்டிப்பா சம்பளம் அதிகமாகும்
  • நம்பிக்கையில் இந்தியர்கள்
  • கொரோனாவுக்கு பிறகு மீண்டெழும் பணியாளர்களின் நம்பிக்கைகள்
Salary Hike: 90% இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பு! ஊதியம் உயரும் என நம்பும் இந்திய பணியாளர்கள் title=

Salary Hike: புதிய நிதியாண்டில் சம்பள உயர்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இந்தியர்கலில் 90% தொழிலாளர்கள் இந்த ஆண்டு ஊதிய உயர்வை எதிர்பார்க்கிறார்கள் என்று அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு 78 சதவீதத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வைப் பெற்றதாகவும், சராசரியாக 4-6 சதவீத உயர்வுகள் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவில் இந்த ஆண்டு ஊதிய உயர்வு குறித்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்துள்ளன, 90 சதவீத மக்கள் சம்பள உயரும் என்று நம்புவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

இந்த ஆய்வில் கலந்துக் கொண்டவர்களில் 20 சதவீதம் பேர் சராசரியாக 4-6 சதவீதம் அதிகரிப்பை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து 19 சதவீதம் பேர் 10-12 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்க்கிறார்கள், ஏடிபி ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் - பீப்பிள் அட் ஒர்க் 2023: ஒரு உலகளாவிய பணியாளர் பார்வை  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் அறிக்கை வெளிப்படுத்திய தகவல்கள் இவை.

இந்தியாவில் கடந்த ஆண்டு 78 சதவீதத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வைப் பெற்றதாகவும், சராசரியாக 4-6 சதவீத உயர்வுகள் இருப்பதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியது.

இந்த ஆண்டு, நாட்டில் சம்பள உயர்வு இல்லாவிட்டாலும், கணிசமான 65 சதவீத ஊழியர்கள் ஏதேனும் ஒரு வகையான தகுதி போனஸ், ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள் அல்லது பயண இழப்பீடு பெர முடியும் என்று நம்புகின்றனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! அகவிலைப்படியை உயர்த்தும் அரசு?

"சம்பள உயர்வைப் பெறுவது, குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தில் உள்ளவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால், செலவழிப்பது குறைந்துள்ளது. அதுமட்டுமல்ல, அதிக வருமானம் ஈட்டுபவர்களும் அழுத்தத்தை உணர்கிறார்கள்.

அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், அதிக வாடகை, உணவு செலவுகள் போன்றவற்றால் ஏற்படும் நிதி நெருக்கடியால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.

பணவீக்கம் உச்சத்தை எட்டியிருந்தாலும், அது இன்னும் சமாளிக்கக்கூடிய நிலைக்குத் திரும்ப சிறிது காலம் எடுக்கும் என்று தோன்றுகிறது" என்று ஏடிபி இந்தியா நிர்வாக இயக்குநர் ராகுல் கோயல் குறிப்பிட்டார்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மனித மூலதன மேலாண்மை (HCM) தீர்வுகள் வழங்குநரான ADP-யின், People at Work 2023: A Global Workforce View, இந்தியாவில் உள்ள 2,000 பணியாளர்கள் உட்பட 17 நாடுகளில் 32,000 தொழிலாளர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது.

அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் லாப வரம்புகளை குறைப்பது போன்ற சவால்களை எதிர்கொள்ளும் முதலாலிகள், ஊழிய்ர்களின் இந்த நம்ப்பிக்கையை பூர்த்தி செய்வது கடினமானது என்று ஏடிபி இந்தியா நிர்வாக இயக்குநர் ராகுல் கோயல் கருதுகிறார்.

மேலும் படிக்க | சூடானில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர தயாராக உள்ள C-130J ராணுவ விமானங்கள்!

தொழிலாளர்கள் தங்களின் தற்போதைய நிறுவனத்திலிருந்து ஊதிய உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிறைவேறாவிட்டால், வேலையில் மாற்றம் செய்வது நல்ல சம்பளத்தைக் கொடுக்கும் என வலுவாக நம்புவதாக ஏடிபி இந்தியா நிர்வாக இயக்குநர் ராகுல் கோயல் குறிப்பிட்டார்.

"பல்வேறு தொழில்களில் பல நாடுகளில் சமீபத்திய வேலைநிறுத்தங்கள் நடைபெறுவதும் குறிப்பிடத்தகக்து. வேலைய மாற்றுவது என்பதுபோன்ற தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க பணியாளர்கள் தயாராக உள்ளனர்.  

ஊதிய உயர்வை வழங்கும் நிதி நிலையில் இல்லாத முதலாளிகள், அதிக நெகிழ்வுத்தன்மை அல்லது பிற சலுகைகளை வழங்குவது போன்ற பிற வழிகளில் ஊழியர்களை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பது பற்றி ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும், கோயல் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | ஆபரேஷன் காவிரி... முதல் கட்டமாக சூடான் துறைமுகம் வந்தடைந்த 500 இந்தியர்கள்!

கடந்த ஆண்டு 10 தொழிலாளர்களில் ஆறு பேர் (62 சதவீதம்) சராசரியாக 6.4 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பிறகும், அதிக ஊதியத்திற்கான கோரிக்கைகள் வந்ததாக அறிக்கை மேலும் வெளிப்படுத்தியது.

தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளிவந்துள்ளன. பல நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளில் தாராளமாக இருக்குமாறு கட்டாயப்படுத்த தொழில்துறை நடவடிக்கை எடுக்க விருப்பம் என அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

உலகளவில், 10 தொழிலாளர்களில் நான்கு பேருக்கு மேல் (44 சதவீதம்) மக்கள், தங்கள் வேலைக்கு குறைவான ஊதியம் பெறுவதாக நம்புவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

மேலும் படிக்க | பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏக்கள் கிடைக்கும்! ராகுல் காந்தியின் கர்நாடக தேர்தல் கணிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News