Assembly Elections 2023 News In Tamil: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் குறிதது அறிவித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையை வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, "5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். அதாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் என்று நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5 மாநிலங்களில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கும்: ஜே.பி. நட்டா
மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் பாஜக செயல்படும் என்றும் அவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
चुनाव आयोग द्वारा विधानसभा चुनावों की घोषणा का स्वागत करता हूं।
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में भाजपा भारी बहुमत से सभी राज्यों में सरकार बनाएगी और आगामी 5 वर्षों के लिए जन आकांक्षाओं को पूरा करने के लिए कटिबद्ध भाव से काम करेगी।
— Jagat Prakash Nadda (@JPNadda) October 9, 2023
பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை அளித்து ஆசீர்வதிப்பார்கள்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு, தனது கட்சியின் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் தனது பதிவில், "மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் நலன், நல்லாட்சி, வளர்ச்சி ஆகியவை பா.ஜ.க. ஆட்சியின் தனிச்சிறப்பாகும். இந்த மாநில மக்கள், பிரதமர் நரேந்திர மோடி ஜி தலைமையில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை அளித்து ஆசீர்வதிப்பார்கள் என நான் நம்புகிறேன் என்று சமூக ஊடகமான X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
मध्य प्रदेश, राजस्थान, छत्तीसगढ़, मिजोरम और तेलंगाना में विधानसभा चुनावों की घोषणा हो चुकी है। गरीब कल्याण, सुशासन और विकास भाजपा शासन की पहचान रही है। मुझे विश्वास है कि इन राज्यों की जनता प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में भाजपा को बहुमत का आशीर्वाद देगी।
— Amit Shah (@AmitShah) October 9, 2023
இந்த முறை தீபாவளி தாமரைக்காக இருக்கும்: ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானும் தனது X தளத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். அவர் தனது பதிவில், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மக்களிடம் பாஜக தொடர்ந்து அன்பை பெற்று வருகிறது. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் மீது மத்தியப் பிரதேசம் நம்பிக்கை கொண்டுள்ளது. தாமரை (பாஜக சின்னம்) மூலம் மட்டுமே மத்திய பிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதை அம்மாநில வாக்காளர்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே இந்த முறை தீபாவளி தாமரைக்காக இருக்கும்" என்று சவுகான் தனது பதிவில் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சிக்கு பிரியாவிடை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
இதற்கிடையில், தேர்தல் அறிவிப்புக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு பிரியாவிடையும் அறிவிக்கப்பட்டு உள்ளது" என்று பாஜகவை கிண்டல் செய்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களில் சமூக நீதி, பொது நலம் மற்றும் முற்போக்கான வளர்ச்சி ஆகியவை காங்கிரஸின் உத்தரவாதங்கள் என்று சமூக ஊடக தளமான X-ல் கார்கே தெரிவித்துள்ளார்.
5 राज्यों के चुनावों की घोषणा के साथ भाजपा और उसके साथियों की विदाई का भी उद्घोष हो गया है।
छत्तीसगढ़, मध्य प्रदेश, राजस्थान, तेलंगाना और मिजोरम में कांग्रेस पार्टी मज़बूती के साथ जनता के पास जाएगी।
जन-कल्याण, सामाजिक न्याय और प्रगतिशील विकास ही कांग्रेस पार्टी की गारन्टी…
— Mallikarjun Kharge (@kharge) October 9, 2023
மேலும் படிக்க - 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு... டிச. 3இல் வாக்கு எண்ணிக்கை!
நவம்பர் 7 ஆம் தேதி முதல் சட்டசபை தேர்தல்
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பர் 7 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வெவ்வேறு நாட்களில் வாக்குபதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று (அக்போடபர் 09, திங்கள்கிழமை) அறிவித்தது.
5 மாநில சட்டசபை தேர்தல் அட்டவணை
-- நவம்பர் 7 ஆம் தேதி மிசோரமில் முதலில் வாக்குப்பதிவு நடைபெறும்.
-- மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-- சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-- ராஜஸ்தானில் நவம்பர் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-- தெலங்கானாவில் நவம்பர் 3 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-- டிசம்பர் 3 ஆம் தேதி 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ