இந்தியா - சீனா எல்லையில் நடைபெறும் ராணுவ மோதல் குறித்து ராகுல்காந்தி ஈடபடவேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்..!
இந்தியா - சீனா எல்லையில் நடைபெறும் ராணுவ மோதல் காரணமாக நாடு ஒன்றுபட்டு நிற்கும் போது மலிவான அரசியலில் ராகுல்காந்தி ஈடபடவேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா வன்முறை மோதலில் காயமடைந்த இந்திய ராணுவ வீரரின் தந்தையின் வீடியோவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ளார்.
லடாக்கில் நடந்த இந்தியா-சீனா ராணுவ துருப்புக்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ராணுவ வீரரின் தந்தை ஒருவர் ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ள வீடியோ ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ""ஒரு துணிச்சலான இராணுவ வீரரின் தந்தை பேசுகிறார், அவருக்கு திரு. ராகுல் காந்திக்கு மிகத் தெளிவான செய்தி உள்ளது. ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டிருக்கும் நேரத்தில், ராகுல் காந்தியும் அரசியலை தாண்டி, தேச நலனுக்காக ஒற்றுமையுடன் நிற்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
A brave armyman’s father speaks and he has a very clear message for Mr. Rahul Gandhi.
At a time when the entire nation is united, Mr. Rahul Gandhi should also rise above petty politics and stand in solidarity with national interest. https://t.co/BwT4O0JOvl
— Amit Shah (@AmitShah) June 20, 2020
அந்த வீடியோவில் இராணுவ வீரரின் தந்தை கூறுகையில்.... “இந்திய ராணுவம் வலுவானது, சீனாவை வெல்ல முடியும். இதில் ராகுல் காந்தி அரசியல் செய்யக்கூடாது. ராணுவத்தில் சேர்ந்து என் மகன் நாட்டுக்காக போராடினான், அவன் மீண்டும் போராடுவான். அவன் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்” என கூறினார்.
READ | வானிலிருந்து விழுந்த 2.78 கிலோ எடையுள்ள விண்கல்.... பீதியில் மக்கள்...!
ராகுல் காந்தி லடாக் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தியா-சீனா ராணுவ துருப்புக்கள் மோதலில் 20 இந்தியர்கள் உயிரிழந்தது தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசை தினமும் தனது ட்விட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில், “சீனாவின் மூர்க்கதனத்திற்கு இந்தியாவின் நிலப்பரப்பை தாரைவார்த்துக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. சீனாவின் நிலத்தில்தான் அதன் ராணுவ வீரர்கள் இருந்தார்கள் என்றால், 1. எதற்காக நம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்? 2. எந்த இடத்தில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
PM has surrendered Indian territory to Chinese aggression.
If the land was Chinese:
1. Why were our soldiers killed?
2. Where were they killed? pic.twitter.com/vZFVqtu3fD— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2020
முன்னதாக பிரதமர் மோடி தலைமையில், நேற்று வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.