ஒமிக்ரான் (Omicron) வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதில் ஆஸ்ட்ரா ஜென்கா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரான் வைரஸூக்கு எதிராக ஆன்டிபாடிகளை நடுநிலைப்படுத்தும் அளவை கணிசமாக அதிகரித்ததைக் கண்டறிந்தனர். ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பிராண்டில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
ALSO READ | கோவிட்-19 தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
டெல்டா வேரியண்டுக்கு எதிராக 2வது டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு, ஒருமாதங்களுக்குப் பிறகு ஆன்டிபாடிகளை நடுநிலைப்படுத்தும் அளவைப்போல் ஒமிக்ரான் வேரியண்டுக்கு எதிராக ஆஸ்ட்ரா ஜென்கா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட செரா (sera) அதிகமாக செயல்படுவதைக் கண்டறிந்துள்ளனர்.
Moderna அல்லது Pfizer போன்ற பிற தடுப்பூசிகள் மீதான ஆய்வுகள், அவற்றின் மூன்றாவது டோஸ்கள் Omicron மாறுபாட்டிற்கு எதிராக குறிப்பிடத்தகுந்த பாதுகாப்பை வழங்குகின்றன என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான அவற்றின் செயலுடன் ஒப்பிடும்போது குறைந்த செயல்திறன் கொண்டது என கூறப்படுகிறது. இந்தியாவில் கொடுக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை கோவிஷீல்ட் ஆகும். சுகாதார நிபுணர்களின் பரிந்துரைப்படி, முதன்மை டோஸிலிருந்து வேறுபட்ட பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டால் அதிக ரிசல்ட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதனையொட்டி ஆஸ்டரா ஜென்காவும் ஓமிக்ரான் மாறுப்பாட்டிற்கு எதிராக பிரத்யேக தடுப்பூசியை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
ALSO READ | 2022-ல் ஷாப்பிங் செய்வது மிகவும் கடினம் - ஏன்?
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடையே ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்தியுள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்று இருமடங்காக இருப்பதை கண்டறிந்துள்ளனர். இது குறித்து அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR