மக்களுக்கு மார்ச் 1இல் ஷாக்... சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு...!

LPG Cylinder Price Hike: வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் இன்று ரூ.23.50 உயர்ந்து, தற்போது ரூ.1960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 1, 2024, 09:06 AM IST
  • கடந்த மாதம் ரூ.50 அளவில் விலை உயர்ந்தது.
  • வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை.
  • விமான எரிபொருளின் விலையும் உயர்ந்துள்ளது.
மக்களுக்கு மார்ச் 1இல் ஷாக்... சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு...! title=

LPG Cylinder Price Hike: ஒவ்வொரு ஆங்கில மாதம் 1ஆம் தேதி அன்றும் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அதில் குறிப்பாக, எண்ணெய் நிறுவனங்கள் அதுசார்ந்த பொருள்களின் விலையை மாற்றியமைக்கும். அந்த வகையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர், விமான எரிபொருள் உள்ளிட்ட சிலவற்றின் விலைகளை ஒவ்வொரு ஆங்கில மாதம் 1ஆம் தேதி அன்றும் திருத்தும். 

விலை திருத்தம் என்றால், அந்த பொருள்களின் விலை உயரும், குறையும் அல்லது அதே அளவில் நீடிக்கும். எனவே, ஆங்கில மாதம் 1ஆம் தேதியை மக்கள் திக் திக் என்ற பதைபதைப்புடன் எதிர்நோக்கியிருப்பார்கள். அந்த வகையில், குடும்பங்களுக்கு நல்ல செய்தியாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் இம்மாதம் எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. குறிப்பாக, 650 நாள்களுக்கும் மேலாக பெட்ரோல் - டீசல் விலையும் உயரவில்லை. 

இருப்பினும், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மட்டும் சுமார் 25 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. கடந்த பிப்.1ஆம் தேதியும் வணிக சிலிண்டருக்கான விலை சென்னையில் மட்டும் ரூ. 50 ரூபாய்க்கு உயர்ந்தது. இதனால், கடந்த பிப். 1ஆம் தேதி முதல் 1,937 ரூபாயில் வணிக சிலிண்டர் சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று 23.50 ரூபாய் உயர்ந்து, 1,960.50 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 1.50 ரூபாய் அளவில் விலை உயர்ந்தது. 

மேலும் படிக்க | புண்ணிய நதியையே கழிவுநீராக்கிய நீர்மாசு! கங்கையில் குளிக்கத் தடை விதித்த பசுமை தீர்ப்பாயம்!

வணிக சிலிண்டருக்கான விலை உயர்வு பல விதங்களில் வியாபாரிகளை பாதிக்கும், இதனால் வெளியில் கிடைக்கும் உணவுகளின் விலை உயரவும் வாய்ப்புள்ளது. கடந்த 2 மாதங்களில் 75 ரூபாய் வரை வணிக சிலிண்டர் விலை உயிர்ந்திருக்கிறது. 

9 கிலோ வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு பெருநகரங்களில் வெவ்வேறாக உள்ளது. மேலும், சென்னையில்தான் மற்ற பெருநகரங்களை விட அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 1,960.50 ரூபாயில் விற்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் 1,795 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 1,911 ரூபாய்க்கும், மும்பையில் 1,749 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

முன்னர் குறிப்பிட்டது போல், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. உள்ளூர் வரிகள் காரணமாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் சென்னையில் 918.50 ரூபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் டெல்லியில் 903 ரூபாய்க்கும், கொலகத்தாவில் 1000 ரூபாய்க்கும், மும்பையில் 902.50 ரூபாய்க்கும், பெங்களூருவில் 905.50 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையில் மட்டுமின்றி, விமான எரிபொருளின் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. தற்போது விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 624.37 ரூபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வுகள் இன்று முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | விவசாயிகள் போராட்டம்: வன்முறையில் ஈடுபட்டால் விசா, பாஸ்போர்ட் ரத்து... ஹரியானா அரசு அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News