தினம் ரூ.6 மட்டுமே.. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்

Reliance Jio Prepaid Plan: ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் பல விதமான தேவைக்கு ஏற்ப மலிவான திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2024, 12:45 PM IST
  • ரிலையன்ஸ் ஜியோ மலிவான திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளது.
  • தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிறுவனங்கள் 15% வரை கட்டணத்தை உயர்த்தின.
  • ஜியோ ரூ.479 திட்டத்தில் ஒரு நாளுக்கான கட்டணம் 6 ரூபாய் ஆகும்.
தினம் ரூ.6 மட்டுமே.. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான் title=

Reliance Jio Prepaid Plan: கடந்த ஜூலை மாதத்தில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்தன. தனியார் நிறுவனங்கள் 15% வரை கட்டணத்தை உயர்த்தின. இதன் காரணமாக மலிவான திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்லுக்கு பலர் மாறித் தொடங்கினர். எனவே, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது சில புதிய மலிவான ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் பல விதமான தேவைக்கு ஏற்ப மலிவான திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளது. அதில் ஜியோவின் ரூ.479 கட்டணத்தில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டமும் அடங்கும். அனைத்து நெட்வொர்க்களுக்குமான வரம்பற்ற அழைப்புகள், இணையத் தரவு, எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் பலன்களை உள்ளடக்கிய 84 நாள் வேலிடிட்டி கொண்ட ரிலையன்ஸ் ஜியோவின் (Relaince Jio) பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டத்தைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

நீண்ட கால வாலிடிட்டி கொண்ட திட்டம்

ஜியோவின் ரூ.479 திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் ரூ 479 திட்டம் நீண்ட கால வாலிடிட்டி கொண்ட திட்டத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கானது. இதில் வாடிக்கையாளர்கள் மொத்தம் 6ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். உங்களுக்கு கூடுதல் தரவு தேவைப்பட்டால், நீங்கள் ஜியோ டேட்டா ஆட்-ஆன் திட்டத்தைச் சேர்க்கலாம்.

ஜியோவின் ரூ 479 திட்டத்தில் கூடுதல் நன்மைகள்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த 84 நாள் வேலிடிட்டி திட்டத்தில், பயனர்கள் மொத்தம் 1,000 எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள். கூடுதலாக, இந்த திட்டத்தில் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான அணுகல் அடங்கும். JioTV மூலம், பயனர்கள் நேரடி தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்கலாம். 84 நாள் வேலிடிட்டியுடன் கூடிய இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற ஜியோ ரீசார்ஜ் திட்டம், ஜியோ போர்ட்டல் மற்றும் MyJio ஆப்ஸில் ப்ரீபெய்ட் வகையின் மதிப்பு பிரிவின் கீழ் கிடைக்கிறது. உங்கள் ஃபோன் மற்றும் பகுதியில் 5G இருந்தால், இந்த திட்டத்தில் 5G சேவையையும் பெறுவீர்கள். 

மேலும் படிக்க | Flipkart Sale: ரூ.10,000 -க்குள் பிராண்டட் ஸ்மார்ட்போன்கள், அசத்தும் பிளிப்கார்ட் சேல்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டம் யாருக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்?

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற அழைப்பு தேவைப்படும் பயனர்களுக்கு ஏற்றது. வீடு அல்லது அலுவலக வைஃபை அணுகல் உள்ளவர்களுக்கும் இது பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு விரிவான மொபைல் டேட்டா தேவையில்லை. இந்த மலிவுத் திட்டம் 84 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்கினாலும், சில பயனர்களுக்கு 6ஜிபி மொத்த டேட்டா வரம்பு என்பது சற்று குறைவானதாக இருக்கலாம். .

மேலும் படிக்க | பாஸ்ட் சார்ஜிங் யூஸ் பண்ணறீங்களா... இந்த தவறுகள் போனை காலி செய்து விடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News