மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற கதையாக, முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
இது திரிணமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆத்திரத்தை உண்டாக்கியது. அதன் எதிரொலியாக, சுவேந்து அதிகாரியின் வாகனத்தை தாக்கியதோடு, நந்திகிராமில் உள்ள பாஜக (BJP)அலுவலகங்களில் ஒன்றை திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால், நந்திகிராமில் பதற்றம் நிலவுகிறது.
முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததால், சுவேந்து அதிகாரி மீது, திரிணமுல் காங்கிரஸ் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. சுவேந்து அதிகாரி முன்னர் திரிணமுல் காங்கிரஸில், மம்தாவின் வலது கை என்ற அளவிற்கு, முக்கிய தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், நடந்து முடிந்த தேர்தலில் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பேனர்ஜீயை வீழ்த்தியுள்ளார்.
ALSO READ | West Bengal Election Result: கடும் போராட்டத்திற்கு மத்தியில் மம்தா பானர்ஜி தோல்வி!
இது தவிர பாஜக கட்சியின் ஆரம்பாக் மற்றும் பிஷ்ணுபூர் பகுதிகளில் உள்ள அலுவலகங்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களால் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் ட்வீட் செய்து வெளியிட்டுள்ளனர்.
After results for West Bengal assembly came in, TMC goons burnt down BJP’s party office in Arambagh... Is this what Bengal will have to suffer for the next 5 years? pic.twitter.com/5GBKLmirGQ
— Amit Malviya (@amitmalviya) May 2, 2021
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள ட்வீட்டில் இதன் வீடியோவை பகிர்ந்துள்ளதோடு, “மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, திரிணாமுல் கட்சியை சேர்ந்த குண்டர்கள் அரம்பாக்கில் உள்ள பாஜகவின் கட்சி அலுவலகத்தை எரித்தனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு வங்காளம் இப்படித்தான் போராட வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் (TMC) தொண்டர்கள் அதோடு நிறுத்தவில்லை. அவர்கள் பிஷ்ணுபூரில் உள்ள கட்சியின் பூத் ஏஜெண்ட் ஒருவரின் வீட்டையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ALSO READ | Election 2021: அசாமில் ஆளும் கட்சியே சிம்மாசனத்தை கைப்பற்றுகிறது CM Sonowal
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR