வெற்றியை மையமாக கொண்டு பட்ஜெட் அமர்வு அமைய வேண்டும் - மோடி!

யூனியன் பட்ஜெட் கூட்டத்தொடர் வெற்றியை கருத்தில் கொண்டு அமையபெற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்!

Last Updated : Jan 28, 2018, 07:44 PM IST
வெற்றியை மையமாக கொண்டு பட்ஜெட் அமர்வு அமைய வேண்டும் - மோடி! title=

யூனியன் பட்ஜெட் கூட்டத்தொடர் வெற்றியை கருத்தில் கொண்டு அமையபெற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்!

நாளை திங்களன்று நடைப்பெறவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்ட அமர்வுக்கு முன்னதாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற்றது. 

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனந்த குமார் தெரிவிக்கையில் "யூனியன் பட்ஜெட் கூட்டத்தொடரானது வெற்றியை கருத்தில் கொண்டு அமையபெற வேண்டும்" என அரசியல் கட்சி தலைவர்களிடமும் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் எதிர்கட்சியினர் அளித்துள்ள பரிந்துரைகளை அரசு கவனமாக ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்!

யூனியன் பட்ஜெட் 2018...

பாராளுமன்ற பட்ஜெட் அமர்வானது நாளை (திங்கள்) தொடங்குகிறது. மேல் அவை மற்றும் கீழ் அவை என இரண்டிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பங்கேற்க அவரது முன்னிலையில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது, ஜனாதிபதி ராம்நாத் பதவி ஏற்றப் பின்னர் அறிவிக்கப்படும் முதல் பட்ஜெட் அமர்வு என்பது குறிப்பிடத்தக்ககது.

யூனியன் பட்ஜெட் 2018 ஆனது வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 9 வரை இந்த கூட்டத்தொடர் தொடர்கிறது. பின்னர் பட்ஜெட் அமர்வின் இரண்டாவது கட்டம் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 6-ஆம் நாள் வரை நடைபெறுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பின்தங்கிய வகுப்பினருக்கான கமிஷன் மற்றும் முத்தலாக் விவகாரங்கிளின் முக்கிய பின்னூட்டங்களைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News