மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக N95 மாஸ்குகள் மற்றும் PPE கிட்கள் வழங்கியுள்ளது

மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு 2 கோடி N95 மாஸ்குகள் மற்றும் 1 கோடி PPE கிட்கள் இலவசமாக வழங்கியுள்ளது

Last Updated : Jul 3, 2020, 08:21 PM IST
  • கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில், மத்திய அரசு 2.02 கோடிக்கும் அதிகமான N95 மாஸ்குகளையும், 1.18 கோடிக்கும் அதிகமான பிபிஇ கருவிகளையும் மாநிலங்களுக்கு விநியோகித்துள்ளது
  • உள்நாட்டில் 11,300 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன
  • பல்வேறு மாநிலங்களுக்கு 1.02 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளதாகவும் MoHFW கூறியுள்ளது
மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக N95 மாஸ்குகள் மற்றும் PPE கிட்கள்  வழங்கியுள்ளது title=

கொரோனா: மாநிலங்களுக்கு 2 கோடி N95 மாஸ்குகள் மற்றும் 1 கோடி பிபிஇ கிட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன

சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொரோனா(Corona): மாநிலங்களுக்கு 2 கோடி என் 95 முகமூடிகள் மற்றும் 1 கோடி பிபிஇ கிட் இலவசமாக வழங்கப்படுகின்றன.

புதுடெல்லி( New Delhi): கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய்க்கு எதிரான போரில், மத்திய அரசு (Central Government) 2.02 கோடிக்கும் அதிகமான N95 மாஸ்குகளையும், 1.18 கோடிக்கும் அதிகமான பிபிஇ கருவிகளையும் மாநிலங்களுக்கு விநியோகித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளுக்கு 6.12 கோடிக்கும் அதிகமான HCQ மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ALSO READ | கொரோனில் கொரோனாவை குணப்படுத்தும்.... அடித்து கூறுகிறார் பாபா ராம்தேவ்..!!!

சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), ஜவுளி துறை மற்றும் மருந்து அமைச்சகம், கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) போன்ற அமைச்சகங்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் பிற உள்நாட்டு தொழில் நிறுவனங்கள், தேவையான மருத்துவ உபகரணங்களான பிபிஇ கிட்கள், N95 மாஸ்குகள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றை தயாரித்து வழங்க ஊக்குவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ |  கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றியை நோக்கி செல்லும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

 

இதுவரை உள்நாட்டில் 11,300  வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவற்றில் 6,154 வென்டிலேட்டர்கள் ஏற்கனவே பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இது பெரிதும் உதவும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களுக்கு 1.02 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளதாகவும் MoHFW உறுதி செய்கிறது. அந்த அறிக்கையில், ஏப்ரல் 1 முதல், டெல்லிக்கு 7.81 லட்சம் PPE கிட்கள் மற்றும் 12.76 லட்சம் N95 முகமூடிகள், மகாராஷ்டிராவிற்கு 11.78 லட்சம் PPE கிட்கள் மற்றும் 20.64 இலட்சம் N95 முகமூடிகள், மற்றும் தமிழ்நாட்டிற்கு 5.39 லட்சம் PPE கிட்கள் மற்றும் 9.81 லட்சம் N95 மாஸ்குகள் MoHFW மூலம் வழங்கப்பட்டுள்ளன.

Trending News