புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் இருப்பதாக WHO எச்சரிக்கை

 புகைபிடிப்பதால், இந்த நோய் தொற்று ஆபத்து அதிகரிக்கிறது என்றும்,  புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நோயாளிகள்,கொரோனா வைரஸினால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 2, 2020, 06:06 PM IST
  • புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிக இருப்பதாக WHO எச்சரிக்கை விடுத்துள்ளது
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளில் புகைபிடிப்பவர்கள் 18 சதவீதம் வரை உள்ளனர்
  • இந்தியாவில் கொரோனா நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது
புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் இருப்பதாக WHO எச்சரிக்கை title=

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிக இருப்பதாக WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் புகைபிடிப்பதால், இந்த நோய் தொற்று ஆபத்து அதிகரிக்கிறது என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகை பிடிக்கும் பழக்கம் 

உள்ள நோயாளிகள், கொரோனா வைரஸினால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.

புகைபிடித்தல் மற்றும் COVID-19 ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து வெளியிடப்பட்ட 34 ஆய்வுகளை, உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்தது.

மேலும் படிக்க | இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை

 

இதில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தொற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படுவதாகவும், நோயின் தீவிரம் அடையும் வாய்ப்புகளும், இறக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.கொரோனா நொய் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களில். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளில் புகைபிடிப்பவர்கள் 18 சதவீதம் வரை உள்ளனர்.

கொரோனா (Coroana) தொற்று உலகம் முழுவதிலும் உள்ள மக்களை ஏதோ ஒரு வகையில் பாதித்துள்ளது. இலட்சக்கணக்கானோர் இந்த நோயினால் நேரிடையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பும் பலரின் வாழ்க்கையை பாதித்துள்ளது.  
இந்தியாவில் கொரோனா நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது.

நாடு முழுவதிலும் 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்         சுமார் 3 லட்சத்தி 60 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக அளவாக, அமெரிக்காவில் 27 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இன்று திருமணம் மறுநாள் தற்கொலை! காரணம் என்ன?

உலகம் முழுவதும் ஒப்பிடுகையில், இந்தியாவில் இதன் பாதிப்பு மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். எனினும் மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை உட்கொண்டு, இந்த ஆபத்தில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். மேலும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை தவிர்ப்பது நல்லது. 

Trending News