எதிர்வரும் தெலுங்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது!
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வந்த நிலையில் அங்கு முதல்வராக பதவி வகித்து வந்த சந்திரசேகர் ராவ் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிய 8 மாதங்கள் இருக்கும் முன்னரே சட்டப்பேரவையை கலைத்தார்.
The Congress party released its first list of 65 candidates for the upcoming Telangana assembly elections
Read @ANI Story | https://t.co/UN1cS2WTCL pic.twitter.com/5HB0b598Ar
— ANI Digital (@ani_digital) November 12, 2018
இதைனையடுத்து வரும் டிசம்பர் 7-ஆம் நாள் 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கான மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சி-யும், எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்தும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 65 வேட்பாளர்களின் பெயர் கொண்ட பட்டியலினை வெளியிட்டுள்ளது. எனினும் தெலுங்கான பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் N உத்தம் குமார் ரெட்டி தலைமை செயலகத்தில் தலைவர்களை சந்தித்த பின்னரே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது வெளியாகியுள்ள வேட்பாளர்களின் பட்டியலினை காங்கிரஸ் கட்சியில் உத்தேச வேட்பாளர் பட்டியலாக கருதலாம்.
தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் - 2018
- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று துவங்கி வரும் 19-ம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
- நவம்பர் 20-ஆம் நாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
- நவம்பர் 22-ஆம் நாள் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசிநாள்.
- டிசம்பர் 7-ஆம் நாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
- டிசம்பர் 11-ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளர் விவரம்...
- மொத்த வாக்காளர்கள் - 2.73 கோடி
- ஆண் வாக்காளர்கள் - 1.38 கோடி
- பெண் வாக்காளர்கள் - 1.35 கோடி
- 3-ஆம் பாலினத்தவர் - 2663