COVID Update: 65 லட்சத்தைத் தாண்டியது தொற்று எண்ணிக்கை-சுகாதார அமைச்சகம்

இறப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள், கொரோனா வைரசுடன் பிற மருத்துவ உடல் கோளாறுகளும் இருந்ததால் இறந்தனர் என சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2020, 12:12 PM IST
  • நாட்டின் COVID-19 தொற்றின் மீட்பு விகிதம் 84.13 சதவீதமாக உள்ளது.
  • இதுவரை நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 1,01,782 பேர் இறந்துள்ளனர்.
  • தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55,09,966 ஆக உயர்ந்துள்ளது.
COVID Update: 65 லட்சத்தைத் தாண்டியது தொற்று எண்ணிக்கை-சுகாதார அமைச்சகம் title=

இந்தியாவில் COVID-19 –ஆல் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியுள்ளது. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை தாண்டியுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு விகிதம் (Recovery Rate) 84.13 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65,49,373 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 75,829 பேருடைய சோதனை முடிவுகள் தொற்றுக்கு சாதகமாக வந்துள்ளன. இறந்தவர்களின் எண்ணிக்கை 1,01,782 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 24 மணி நேர இடைவெளியில் 940 உயிர்களைக் கொன்றது என காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தரவு சுட்டிக்காட்டுகிறது.

தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55,09,966 ஆக உயர்ந்துள்ளது. 9,37,625 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளார்கள். இது மொத்த தொற்று எண்ணிக்கையில், 14.32 சதவீதமாகும் என்று தரவு தெரிவிக்கிறது.

COVID-19 இறப்பு விகிதம் மேலும் 1.55 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ALSO READ: இந்த அழகிய தமிழக கிராமத்தில் கொரோனா எட்டிக் கூட பார்க்கவில்லை: ரகசியம் என்ன?

இந்தியாவின் COVID-19 எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும் தாண்டியது. இது செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தை தாண்டி செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தை தாண்டியது.

ICMR-ன் படி, அக்டோபர் 3 வரை மொத்தம் 7,89,92,534 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 11,42,131 மாதிரிகள் சனிக்கிழமை சோதனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் இறந்த 940 பேரில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 278 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த 100 பேர், தமிழ்நாட்டிலிருந்து 65 பேர், மேற்கு வங்கத்திலிருந்து 62 பேர், பஞ்சாபிலிருந்து 61 பேர், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 60 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 41 பேர் மற்றும் டெல்லியைச் சேர்ந்த 34 பேர் அடங்குவர்.

இதுவரை நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 1,01,782 பேர் இறந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 37,758 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 9,718 பேரும், கர்நாடகாவிலிருந்து 9,219 பேரும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 5,977 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த 5,941 பேரும், டெல்லியில் இருந்து 5,472 பேரும், மேற்கு வங்காளத்திலிருந்து 5,132 பேரும், பஞ்சாபிலிருந்து 3,562 பேரும் குஜராத்திலிருந்து 3,487 பேரும் அடங்குவர்.

இறப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள், கொரோனா வைரசுடன் (Corona Virus) பிற மருத்துவ உடல் கோளாறுகளும் இருந்ததால் இறந்தனர் என சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியது.

"எங்கள் புள்ளிவிவரங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICMR) ஒருமுறை ஒத்திசைத்துப் பார்க்கப்படுகின்றன" என்று அமைச்சகம் தனது இணையதளத்தில் கூறியது. மாநில வாரியான புள்ளிவிவரங்கள் மேலும் சரிபார்ப்பு மற்றும் மறு ஆய்வுக்கு உட்பட்டது என்றும் அமைச்சகம் தெரிவித்தது.

ALSO READ: Unlock 5.0: பள்ளிகள், கல்லூரிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது கல்வி அமைச்சகம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News