₹2,290 கோடி மதிப்பிலான இராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!!!

நமது  இராணுவத்தின் கரங்களை வலுப்படுத்துவதற்காக, ₹2,290 கோடி  மதிப்பிலான உபகரணங்கள் வாங்க  பாதுகாப்பு தளவாடங்கள் கையகப்படுத்தும் கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2020, 03:03 PM IST
  • நமது இராணுவத்தின் கரங்களை வலுப்படுத்துவதற்காக, ₹2,290 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வாங்க பாதுகாப்பு தளவாடங்கள் கையகப்படுத்தும் கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.
  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் பாதுகாப்பு கையகப்படுத்தல் நடைமுறை (DAP) - 2020 ஐ வெளியிட்டார்.
  • முதல் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை (DAP) 2002 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது
 ₹2,290 கோடி மதிப்பிலான இராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!!! title=

நமது  இராணுவத்தின் கரங்களை வலுப்படுத்துவதற்காக, ₹2,290 கோடி  மதிப்பிலான உபகரணங்கள் வாங்க  பாதுகாப்பு தளவாடங்கள் கையகப்படுத்தும் கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு தளவாடங்கள் கையகப்படுத்தும் கவுன்சில் (DAC) கூட்டம் இந்திய ஆயுதப்படைகளுக்கு தேவையான  ₹2,290 கோடி  மதிப்பிலான  பல்வேறு உபகரணங்களை வாங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனையாளர்களிடமிருந்து செய்யப்படும் கொள்முதலும் அடங்கும்.

இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் பாதுகாப்பு கையகப்படுத்தல் நடைமுறை (DAP) - 2020 ஐ வெளியிட்டார். முதல் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை (DAP) 2002 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, பின்னர் அதிகரித்து வரும் உள்நாட்டுத் தொழிலுக்கு உத்வேகம் அளிப்பதற்கும், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பை அடைவதற்கும் அவ்வப்போது இந்த நடைமுறை விதிகள் திருத்தப்பட்டன.

DAP 2020 மோடி அரசின் தற்சார்பு இந்தியா என்னும் குறிக்கோளுக்கு ஊக்க அளிக்கும்.  இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான  குறிக்கோளைக் கொண்ட மேக் இன் இந்தியா முன்முயற்சி மூலம் இந்திய உள்நாட்டு தொழில்துறை மேம்பட்ட்டு வருகிறது. புதிய அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய உள்நாட்டு தொழில்துறையின் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் இறக்குமதி மாற்று மற்றும் ஏற்றுமதிக்காக உற்பத்தி மையங்களை நிறுவ அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை DAP 2020 உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Unlock 5.0 : திரையரங்குகள், சுற்றுலா மையங்கள் திறக்கப்படுமா...!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News