தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து ஜமாதிகளை இடம்மாற்ற அனுமதி...

வெளிநாட்டு ஜமாதிகளை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து ஒன்பது மாற்று இடங்களுக்கு மாற்ற  டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Last Updated : May 29, 2020, 07:40 PM IST
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து ஜமாதிகளை இடம்மாற்ற அனுமதி... title=

வெளிநாட்டு ஜமாதிகளை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து ஒன்பது மாற்று இடங்களுக்கு மாற்ற  டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மாற்று இடங்களுக்கு செல்லும் உறுப்பினர்களின் விரிவான பட்டியலைத் தயாரித்து  டெல்லி போலீசுக்கு  அளிக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த தப்லிகி ஜமாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மாற்று இடங்களுக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பின்னரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்படுவதாகக் கூறிய உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அனைத்து வெளிநாட்டினரும் நியமிக்கப்பட்ட ஒன்பது இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும், தப்லிகி ஜமாத் அவர்களின் உணவுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிற இடங்களுக்கு மாற்றப்பட்ட உறுப்பினர்களின் விரிவான பட்டியலைத் தயாரித்து டெல்லி போலீசில்  சமர்ப்பிக்க   நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறையிருக்கு  தெரிவிக்காமல் அவர்கள் இந்த இடங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மே 25 அன்று குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலை அறிக்கைக்கு பின்னர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை வழங்கியுள்ளது.

இதற்கிடையில், குற்றப்பிரிவு வியாழக்கிழமை 536 வெளிநாட்டு ஜமாத்திகளுக்கு எதிராக 12 புதிய குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யும். தொடர்ந்து மூன்றாவது நாளாக காவல்துறை குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியின் நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த தப்லிகி ஜமாத் கூட்டத்தில்  கலந்து கொண்ட 280 வெளிநாட்டு ஜமாத் உறுப்பினர்கள் மீது புதன்கிழமை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

கொரோன வைரசினால் பொது மக்கள் கூட்டமாக கூடுவதற்கு அரசாங்கம் விதித்த தடையை மீறியதாக, மௌலானா சாத் முன்னர் குற்றம் சாட்டப்பட்டார்.

விசாரணையில், டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தப்லிகி ஜமாத்தின் 943 வெளிநாட்டு உறுப்பினர்களில் 746 பேரிடமிருந்து டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளை பெற்றுள்ளது. மீதமுள்ள பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களைத் தேடி, குற்றப்பிரிவுக் குழுவும் பல இடங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது. டெல்லி பொலிஸ் வட்டாரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டினர் சுற்றுலா விசாக்களில் இந்தியாவுக்கு வந்ததாக  போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அவர்களில் சிலர் விசா காலாவதியான பிறகும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கிறார்கள். இது ஒரு திட்டமிட்ட உக்தியாக இருக்கக்கூடும் என்ற கோணதில் குற்றப்பிரிவால் விசாரிக்கப்படுகிறது.

அரசாங்க தரவுகளின்படி, இந்த ஆண்டு மார்ச் மாதம் நிஜாமுதீன் மார்க்கஸில் நடைபெற்ற ஜமாத் நிகழ்வு தொற்றுநோய்களின் போது நாடு முழுவதும் மொத்த COVID-19 வழக்குகளில் 30% உயர்வுக்கு வழிவகுத்தது.

மொழியாக்கம்: அரிஅரன்

Trending News