இமயமலை பகுதிகளில் ஒரு பெரிய பூகம்பம் (Earthquake) ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் அடுத்த பெரிய பூகம்பத்தின் தீவிரம் எட்டு அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கலாம் என்றும் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளன. இது நம் வாழ்நாளிலேயே வரக்கூடும் என்பது மிகவும் சாத்தியமான ஒரு விஷயமாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இத்தகைய இயற்கை பேரழிவு ஏற்பட்டால் மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியா (India) போன்ற நாட்டில் முன்னோடியில்லாத வகையில் உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூகம்பத்தால் மிகப் பெரிய பகுதி பாதிக்கப்படலாம்
இமயமலை (Himalayas) பகுதிகளில் எதிர்காலத்தில் வரவுள்ள பூகம்பங்கள் 20 ஆம் நூற்றாண்டில் ‘Aleutian Subduction’ மண்டலத்தில் ஏற்பட்ட பூகம்பங்களுக்கு ஒத்ததாக இருக்கலாம் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் வரம்பு அலாஸ்கா வளைகுடாவிலிருந்து கிழக்கு ரஷ்யாவின் கம்சட்கா வரை பரவி இருந்து.
ஆகஸ்டில் நில அதிர்வு ஆராய்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு மதிப்பாய்வில், வரலாற்று குறிப்புகளுக்கு முந்தைய பூகம்பங்களின் அளவு மற்றும் நேரத்தை மதிப்பிடுவதற்கும் எதிர்கால ஆபத்துக்களை கணிப்பதற்கும் அடிப்படை புவியியல் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டன.
அடுத்த பெரிய பூகம்பம் நம் வாழ்நாளிலேயே ஏற்படும்
கிழக்கின் அருணாச்சல பிரதேசம் (Arunachal Pradesh) முதல் மேற்கில் பாகிஸ்தான் வரை முழு இமயமலை எல்லைகளும் கடந்த காலங்களில் பெரும் பூகம்பங்களுக்கு ஆதாரமாக இருந்தன என்று ஆய்வின் ஆசிரியர் ஸ்டீவன் ஜி. வெஸ்னாஸ்கி கூறினார். "இந்த பூகம்பங்கள் மீண்டும் வரும். அடுத்த பெரிய பூகம்பம் நம் வாழ்நாளில் ஏற்படும் என்பதில் ஆச்சரியமில்லை" என்று அமெரிக்காவின் ரெனோ, நெவாடா பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் நில அதிர்வுவியல் பேராசிரியரும் நியோடெக்டோனிக் ஆய்வுகள் மையத்தின் இயக்குநருமான வெஸ்னோவ்ஸ்கி கூறினார்.
டெல்லி உட்பட பல நகரங்கள் பூகம்பத்தின் வரம்பில் இருக்கும்
நிலநடுக்கவியலாளரும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான சுப்ரியோ மித்ரா, இந்த ஆய்வு முன்னர் செய்த ஆய்வுகளை ஒத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆய்வின் படி, இமயமலையில் உள்ள அல்லது ஏற்படும் ஒரு அமைப்பு, ரிக்டர் அளவில் எட்டுக்கும் மேற்பட்ட அளவிலான பூகம்பங்களை ஏற்படுத்தும். பெரிய நகரங்களான சண்டிகர் மற்றும் டெஹ்ராடூன் மற்றும் நேபாளத்தின் காத்மாண்டு ஆகியவை இமயமலை பூகம்பத்தின் தாக்கப் பகுதிக்கு அருகில் உள்ளன என்று வெஸ்னாஸ்கி கூறினார்.
இவ்வளவு பெரிய பூகம்பத்தின் எல்லைக்குள் இமயமலையின் தெற்கில் இருக்கும் நாட்டின் தலைநகரான தில்லியும் (Delhi) வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ALSO READ: ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டால், நீங்கள் எடுக்க வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கைகள் இங்கே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR