நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் Budget தயாரிப்பு குழு அதிகாரிகள்

பிப்ரவரி முதல் தேதியன்று இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வழங்குகிறார். பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பு சாமனியர்கள் முதல், அரசியல் அறிஞர்கள் என பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவதாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2021, 07:04 PM IST
  • இந்த ஆண்டு பட்ஜெட்டை தயாரிப்பு அதிகாரிகள் குழுவினர்
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி முதல் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
  • மத்திய பட்ஜெட் தயாரிப்பில் தமிழகத்தை சேர்ந்த அதிகாரி டி.வி சோமநாதன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் Budget தயாரிப்பு குழு அதிகாரிகள் title=

புதுடெல்லி: பிப்ரவரி முதல் தேதியன்று இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வழங்குகிறார். பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பு சாமனியர்கள் முதல், அரசியல் அறிஞர்கள் என பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவதாகும்.

பொதுமக்களின் தினசரி வாழ்க்கையை மட்டுமல்ல, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், தொழில்துறை, வர்த்தகம், ஏற்றுமதி என பல துறையைச் சேர்ந்தவர்களும் மத்திய அரசின் பட்ஜெட்டை கவனமாக கவனிப்பார்கள்.

ஒரு நாட்டின் பட்ஜெட்டை தயாரிப்பதில் நிதியமைச்சர் மற்றும் அவரது பட்ஜெட் குழுவினரின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்திய பட்ஜெட் 2021-22 தயாரிக்கும் குழுவில் நிதியமைச்சரைத் தவிர நூற்றுக்கணக்கான அதிகாரிகளும், அமைச்சக ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். அதில் முக்கியமான சில அதிகாரிகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

Also Read | Budget 2021: மருத்துவ உபகரணங்களின் வரி குறையலாம், health sector-ன் எதிர்பார்ப்புகள்
 
தலைமை பொருளாதார ஆலோசகர்  கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்

தற்போது அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருக்கும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் பட்ஜெட் தயாரிப்பில் முக்கியமானவர். அவர் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.  

2020 ஆம் ஆண்டில், இந்தியா எவ்வாறு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற முடியும் என்பதற்கான மூலோபாய கணிப்பையும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் முன்வைத்தார்.

நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர்  தருண் பஜாஜ் 

ஹரியானா கேடரைச் சேர்ந்த 1988 தொகுதி ஐ.ஏ.எஸ் அதிகாரி தருண் பஜாஜ் கடந்த ஆண்டு மே மாதம் பொருளாதார விவகாரத் துறையின் செயலாளராக தனது பணியைத் தொடங்கினார்.

இவர், 2015 முதல் 2020 ஏப்ரல் வரை பிரதமரின் இணை செயலாளராகவும், கூடுதல் செயலாளராகவும் பணியாற்றினார். 2014-15 ஆம் ஆண்டில் பொருளாதார விவகாரங்கள் துறை இணை செயலாளராகவும், பணியாற்றியுள்ளார்.  

Also Read | Budget 2021: இந்தியாவின் முதல் பட்ஜெட்டை வழங்கியவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா

DIPAM செயலாளர்,  துஹின் காந்தா பாண்டே

1987 பேட்ச் ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான  துஹின் காந்தா பாண்டே,, 2019 இல் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை ( Department of investment and public asset management, DIPAM ) செயலாளராக பொறுப்பேற்றார்.

நிதி செயலாளர்  அஜய் பூஷண் பாண்டே 

அஜய் பூஷண் பாண்டே 1984 பேட்ச் மகாராஷ்டிர கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.  கடந்த ஆண்டு மார்ச் மாதம், நிதி செயலாளராக சேர்ந்தார். ஜிஎஸ்டி (GST) வருவாய் வசூலை விரைவாக மேற்கொள்ளும் முயற்சிக்காக பாண்டே பாராட்டப்படுகிறார்.

முன்னதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட பாண்டே, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

Also Read | Union Budget 2021: விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு வரம்பு அதிகரிக்கப்படலாம்.!

Expenditure செயலாளர்  டி.வி சோமநாதன்:

தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த 1987 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன், 2019 ல் நிதி அமைச்சகத்தில்  Expenditure துறையின் செயலாளராக பதவியேற்றார்.

நிதி சேவைகள் துறை  செயலாளர் தேபாஷிஸ் பாண்டா

கடந்த ஆண்டு பிப்ரவரியில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி  தேபாஷிஸ் பாண்டா நிதித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். உத்தரபிரதேச கேடரின் 1987 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பாண்டா நிதிச் சேவைத் துறையின் சிறப்புச் செயலாளராக பணியாற்றியவர்.  

ALSO READ: Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News