செப்டம்பர் முதல் சுவிஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களைப் பெறலாம் என மத்திய வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது!!
டெல்லி: சுவிஸ் வங்கி ரகசியத்தின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் இந்தியா செப்டம்பர் முதல் சுவிட்சர்லாந்தில் தனது குடிமக்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளின் விவரங்களைப் பெறலாம் என தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கம் 2014 ஆம் ஆண்டில் முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கறுப்புப் பணத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பெரிய வெற்றியாகும்.
"சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய குடியிருப்பாளர்கள் வைத்திருக்கும் அனைத்து நிதிக் கணக்குகளுக்கும் இந்தியா 2018 காலண்டர் ஆண்டின் தகவல்களைப் பெறும். சுவிஸ் வங்கி ரகசியத்தின் சகாப்தம் இறுதியாக முடிவடையும் என்பதால், கறுப்புப் பணத்திற்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருக்கும் "என்று வருமான வரித்துறை ஒரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
India will receive information of the calendar year 2018 in respect of all financial accounts held by Indian residents in Switzerland. This will be a significant step in the Government’s fight against black money as the era of Swiss bank secrecy will finally be over.
— Income Tax India (@IncomeTaxIndia) August 31, 2019
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "சுவிட்சர்லாந்து பிரதிநிதிகள் மத்திய வருவாய் துறை செயலாளர் ஏ.பி.பாண்டே, நேரடி வரிகள் வாரிய தலைவர் பி.சி. மோடி, உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் ஆகியோருடன் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சில குறிப்பிட்ட வழக்குகளில் கேட்கும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தை துரிதமாக செயல்படுத்துவது குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர்.
அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அளிக் கும் திட்டம் இன்று (செப்டம்பர் 1) முதல் தொடங்குகிறது. 2018-ம் ஆண்டில் உள்ள கணக்கு விவரங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும். 2018-ல் வங்கி கணக்கு முடிக்கப்பட்டு இருந்தாலும் அந்த தகவலும் கிடைக் கும். இது கருப்பு பணம் மற்றும் ‘சுவிஸ் வங்கி ரகசியம்’ ஆகியவற்றுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.