தற்போது ட்விட்டர் தளத்தில் #BoycottHimalaya என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதன் பின்னணி என்னவென்று சற்று அராய்ந்து பார்க்கையில் ஒரு சில போஸ்ட்களில் இமாலயா நிறுவனத்தின் பதில் கடிதம் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அவ்வாறு 2015ல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் பதில் ஒன்றில் அந்த மருந்து நிறுவனம் தங்களின் பியூர் ஹெர்ப் கேப்ஸியூல்களை தயாரிக்க Bovine bone எனப்படும் மாட்டு எலும்பு மஜ்ஜையைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்த விசாரணையில், அந்த பதில் மின்னஞ்சல் இமாலயா நிறுவன உதவி மையம் சார்பாகதான் அனுப்பப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் 2021ல் இந்த விவகாரத்திற்காக இமாலயா நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தங்களிடம் கேப்ஸியூல் வடிவ தயாரிப்புகளே இல்லை என்று குறிப்பிட்டு, தங்களது தயாரிப்புகள் அனைத்தும் டேப்லெட் வடிவிலேயே விநியோகிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தது.
— Himalaya Wellness Company (@HimalayaIndia) July 13, 2021
மேலும் படிக்க | பீஸ்ட் டிரெய்லர் எப்போது? தேதியை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்
மேலும், இந்த சர்ச்சையை கிளப்பிய குறிப்பிட்ட மருந்து, அதன் பின்னர் தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால் அதற்கு முன்பு அந்த மருந்தை பயன்படுத்தியவர்கள் தயாரிப்பு டப்பாவின் பின்புறத்தை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர்.
தயாரிப்பு டப்பாவின் பின்பக்கத்தில் கேப்ஸியூல் வகை என்று குறிப்பிட்டிருந்தது. எனவே இமாலயா நிறுவனம் கேப்ஸியூல்களை தயாரித்தது அவர்களின் அறிக்கைக்கு எதிர்மறையான தகவலை தருகிறது.
இதற்கிடையில் இமாலயா நிறுவனம் ஹலால் விதிகளுக்குட்பட்டு பொருட்களை தயாரிப்பதாக தகவல்கள் கசிந்தன. அது குறித்த அறிக்கையும் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டது.
இவ்வாறு இருக்க, இதற்கிடையில், பதஞ்சலி, ரிலையன்ஸ் நிறுவனத்தை ஆதரிக்க வேண்டாம், அது ஆர்எஸ்எஸ் அமைப்பினரது இயக்கம் என ஒருவர் மைக்கில் பேசி வைரலானார். அவர் ஒருவேளை இமாலயா நிறுவன உரிமையாளராக இருக்கலாம் என்று புரளிகள் எழுந்தன. ஆனால் அது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவையாவும் சர்ச்சைகளை தூண்டியுள்ள இந்நிலையில் தற்போது இமாலயா நிறுவன பொருட்களை யாரும் வாங்காதீர்கள் என்று கூறி இணையதளத்தில் #BoycottHimalaya என்ற ஹேஸ்டாக்கை டிரெண்டாக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஒருவழியாக பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR