தெற்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பின் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தார். முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த அவர், உக்ரைன் விவகாரம், லடாக்கில் இரு நாடுகளின் படை குறைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் வாங் யீ நேரில் சந்தித்தார். 2020-ம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் படைகளை குவித்தன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் படைகள் ஓரளவு குறைக்கப்பட்டாலும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த மோதலுக்குப் பிறகு இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும்.
மேலும் படிக்க | கால்வன் மோதல்; சீனாவின் பொய்களை அம்பலப்படுத்தியது ஆஸ்திரேலிய நாளிதழ்
இரு நாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவதற்காகவும், இந்த ஆண்டு இறுதியில் பெய்ஜிங்கில் நடத்தப்படும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காகவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இரு நாட்டு தரப்பில் இருந்தும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்தியா வருவதற்கு முன்னதாக பாகிஸ்தாஸ் சென்றிருந்த வாங் யீ, அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் காஷ்மீர் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜம்மு காஷ்மீர் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க இந்தியாவின் உள் நாட்டு விவகாரங்கள் என்றும், சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு கருத்து தெரிவிக்க உரிமை இல்லை என்றும் குறிப்பிட்டது. இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு வாங் யீ இன்று மாலை நேபாளம் செல்ல உள்ளார்.
மேலும் படிக்க | Ladakh: கோக்ராவிலிருந்து பின் வாங்கின இந்திய, சீன படைகள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR