இந்தியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி காலமானார்

கொரோனா வைரஸால் (Corona Virus) பாதிக்கப்பட்டதை அடுத்து தெற்கு தில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 30, 2021, 10:56 AM IST
  • சோலி சொராப்ஜி 1989 முதல் 1990 வரை, அதன்பிறகு 1998 முதல் 2004 வரையிலும் இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார்.
  • இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது.
  • ஒவ்வொரு நாளும் தொற்று வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி காலமானார் title=

இந்தியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் திரு. சோலி சொராப்ஜி (Former Attorney General Soli Sorabjee) காலமானார். கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்த நிலையில் இன்று காலை சோலி சொராப்ஜி காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 91.

கொரோனா வைரஸால் (Corona Virus) பாதிக்கப்பட்டதை அடுத்து தெற்கு தில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலம் மும்பையில் பிறந்த சோலி சொராப்ஜி, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் 1971ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பதவி உயர்வு பெற்றார். 

1989 முதல் 1990 வரை இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். அதன்பிறகு 1998 முதல் 2004 வரையிலும்  இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (Attorney General) சோலி சொராப்ஜி பணியாற்றினார். மனித உரிமைகளை பாதுகாக்க போராடியதற்காக சோலி சொராப்ஜிக்கு பத்மவிபூஷண் விருதினை மத்திய அரசு (Central Government) வழங்கி கௌரவித்தது.

சொரப்ஜி பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக பல வழக்குகளில் வாதிட்டார், 

 இந்தியாவில் பத்திரிகை தணிக்கை சட்டங்கள் (1976); இந்தியாவில் அவசரநிலை, தணிக்கை மற்றும் பத்திரிகை, 1975-77 (1977) போன்ற முக்கிய புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது.

ALSO READ | அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு ‘ஆயுஷ்-64’ மருந்து சூப்பர் பவர்...

 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News