பாஜக கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95% மக்கள் ஏழைகள்...

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளை விதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!

Last Updated : Jan 11, 2019, 08:44 AM IST
பாஜக கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95% மக்கள் ஏழைகள்... title=

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளை விதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!

மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா மத்திய அமைசரவையில் ஒப்புதல் பெற்றது. பின்னர் நேற்று நாடாளுமன்ற மக்களவையிலும் ஒப்புதல் பெற்றது. 

எனினும் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம்!, மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு!

ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News