நர்மதை நதிக்கரையில் உள்ள ஒற்றுமையின் சிலையை பார்வையிட்டார் HD தேவேகவுடா!

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை முன்னாள் பிரதமர் HD தேவேகவுடா பார்வையிட்டார்!

Last Updated : Oct 6, 2019, 11:07 AM IST
நர்மதை நதிக்கரையில் உள்ள ஒற்றுமையின் சிலையை பார்வையிட்டார் HD தேவேகவுடா!  title=

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை முன்னாள் பிரதமர் HD தேவேகவுடா பார்வையிட்டார்!

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் 182 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை சுமார் ரூ.2,389 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. சர்தார் வல்லபாய் படேல் சிலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.  

இந்நிலையில், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமாகிய தேவே கவுடா குஜராத் மாநிலம் சென்றார். அங்கு சர்தார் சரோவர் நதிக்கரையில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

குஜராத்தின் சாது-பெட் தீவில் அமைந்துள்ள 182 மீட்டர் உயரமான சிலை 20,000 சதுர மீட்டருக்கு மேல் உள்ளது மற்றும் 12 சதுர கி.மீ செயற்கை ஏரியால் சூழப்பட்டுள்ளது.

 

Trending News