டெல்லி: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் தீயாய் பரவி வருகிறது. தலைநகர் டெல்லி மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக உள்ளது.
தொடர்ந்து பல நாட்களாக ஒற்றை நாள் தொற்றின் அளவு 20,000-ஐ விட அதிகமாக உள்ளது.
இது தொடர்பாக பேசிய டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal), "டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தில்லி அரசு தலா ரூ .5000-ஐ வழங்கும். ரேஷன் கார்டுகளுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக பொருட்கள் அளிக்கப்படும். இதனால் இந்த நிதி நெருக்கடியில் அவர்களுக்கு ஒரு சிறிய உதவி கிடைக்கும்" என்று கூறினார்.
டெல்லி முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால், தொற்றின் நிலையை சமாளிக்க சில அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்:
- டெல்லியில் ரேஷன் கார்டுகளுக்கு இரண்டு மாதங்கள் ரேஷன் (Ration) பொருட்கள் இலவசமாக அளிக்கப்படும்.
- ஆட்டோ மற்றும் டேக்சி ஓட்டுனர்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்.
- தேவையில் உள்ள மக்களுக்கு பொது மக்கள் முன்வந்து உதவுமாறு அரசு பொது மக்களை கேட்டுக்கொண்டுள்கிறது.
- லாக்டவுனை நீட்டிக்கும் சிந்தனை தற்போது இல்லை.
ALSO READ: தொடரும் கொரோனா தாண்டவம்: 24 மணி நேரத்தில் சுமார் 3.57 லட்சம் பேர் பாதிப்பு, 3449 பேர் பலி
டெல்லியில் லாக்டவுனை (Lockdown) நீட்டிப்பதாக இல்லை என டெல்லி முதல்வர் கூறினாலும், தொற்றின் எண்னிக்கை அதிகமாக இருப்பதால், அதை கட்டுப்படுத்த, ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் மொத்த தொற்று எண்ணிக்கை 2 கோடியை எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் செவ்வாய்க்கிழமை (மே 4, 2021) தெரிவித்தன.
கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3,20,289 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,449 பேர் இறந்தனர்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பத்து மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியாவின் மொத்த தொற்று எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, சத்தீஸ்கர், தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஹரியானா ஆகிய 12 மாநிலங்களில் பெரும்பாலானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: மே 6 முதல் தமிழகத்தில் புதிய கோவிட் கட்டுப்பாடுகள்: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR