ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் பட்டேல் விலகலுக்கு மத்திய அரசு காரணமில்லை என மத்திய நித அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்!
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் பட்டேல் கடந்த டிச.,10-ஆம் நாள் திடீரென தனது பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் பதவியில் இருந்து, கடந்த 2017-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற, சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக மத்திய அரசு நியமித்தது.
சமீபகாலமாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகித்த உர்ஜித் படேல் இடையே நிதி விவகாரத்தில் மோதல் நிலவியது எனவும்., இதன் காரணமாக ஏற்பட்ட நெறுக்கடி காரணமாகவே உர்ஜித் தனது பதவியினை ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிர்க்கு பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இதுகுறித்து தெரிவிக்கையில்... உர்ஜித் பட்டேலை பதவி விலக கோரி அரசு நிர்பந்திக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் ஒரு நாணயத்தை கூட மத்திய அரசு கோரவில்லை என தெரிவித்தார்.
மேலும் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்த பின்னரே, நெறுக்கடி நிலைமையினை சரிசெய்ய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.
உர்ஜித் பட்டேலை ஒருபோதும் பதவி விலக அரசு கோரவில்லை., என தெரிவித்தார்.