சட்டப்படி ராமர் கோயில் அமைப்பதற்கான வழியை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த விஜயதசமி விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத்,
சுயமரியாதைக்காக ராமர் கோயில் கட்டப்படுவது அவசியம். அது நாட்டின் நல்லொழுக்கம், ஒறுமைப்பாட்டிற்கு வழிவகுக்கும். ராமர் பிறந்த இடத்தில் தான் அவருக்கு கோயில் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் கோயில் எப்போதோ கட்டி முடிக்கப்பட்டிருக்கும். சட்டப்படி ராமர் கோயில் அமைப்பதற்கான வழியை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.
சபரிமலை பாரம்பரியம் என்பது பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வருவது. இனியும் கடைபிடிக்கப்பட உள்ளது. கோயிலுக்கு செல்பவர்கள் யாரும் எதிராக மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள். பெரும்பாலான பெண்கள் இதனை வாழ்க்கை முறையாக பின்பற்றுகிறார்கள்.
அரசாங்கம் மாற்றியமைந்தாலும் இந்தியாவின் அண்டை நாட்டினுடைய கொள்கையில் அதே நிலைதான் உள்ளது.ஒரு புதிய அரசாங்கம் அமைந்த போதிலும் எல்லைகள் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை. பாதுகாப்புத் துறையில் ஒட்டுமொத்த சுய-நம்பிக்கை இல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. நாட்டின் பாதுகாப்பைப் பற்றி நாடு எச்சரிக்கையுடன் உள்ளது, மேலும் தோட்டாக்களைக் கொண்டு பதிலளிப்பதற்கு தைரியம் உள்ளது. ஆயுதங்களுடன் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா மாறி வருகிறது. உலகிற்கே தலைமையாக இந்தியா மாறும். நாம் பலம் வாய்ந்த நாடாக மாற வேண்டும்.