குஜராத் தேர்தல் 2017: முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

குஜராத் மாநிலத்தில் முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

Last Updated : Dec 7, 2017, 07:31 PM IST
குஜராத் தேர்தல் 2017: முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது title=

182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும். டிசம்பர் 9-ம் தேதி மற்றும் 14-ம் தேதி என வாக்குபதிவு இரண்டு கட்டமாக நடைபெறும். குஜராத் மாநிலத்தில் முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடியும் கட்டத்தில் இருந்ததால், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி தீவிர பிரசாரத்தில் இன்று ஈடுபட்டனர்.

1998 முதல் குஜராத்தில் பிஜேபி அதிகாரத்தில் உள்ளது. இந்த மாதம் நடக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால் அனைவரின் பார்வை குஜராத் தேர்தலின் மீது உள்ளது.
 
காங்கிரஸ் கட்சியுடன் ஹர்திக் படேலுடன் கைகோர்த்திருப்பதால் பாரதீய ஜனதா கட்சிக்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

Trending News