மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின மக்களைக் கண்டறிந்து சிறுபான்மை சமூக அந்தஸ்து வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரு மாநிலத்தில் மதம் அல்லது மொழி அடிப்படையில் சிறுபான்மையினராக இருந்தால் அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு இந்த வாதத்தை முன்வைத்தது. நாட்டின் 10 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் நிலையில், இந்துக்களுக்கு பதிலாக உள்ளூரில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினர் தான் சிறுபான்மையினர் தொடர்பான திட்டங்களின் பலன்கள் கிடைப்பதாகவும் உபாத்யாய் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்துக்கள் சிறுபான்மையினராக பல மாநிலங்களில் உள்ள நிலையில், அவர்களுக்கு சிறுபான்மையினருக்கான நலன்கள் கிடைப்பதில்லை என்றும், அம்மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினரே, சிறுபான்மை பலன்களை தொடர்ந்து பெற்று வருகிறார்கள் எனவும், அம்மாநிலங்களில் இந்துக்களை மைனாரிட்டிகளாக அறிவித்து, அவர்களுக்கு அந்த நலன் சென்று சேர உத்தரவிட வேண்டும் என சில ஆண்டுகளாக நீதிமன்றங்களில் பாஜகவை சேர்ந்த அஷ்வினி உபாத்யாய் மனு தாக்கல் செய்திருந்தார்.
10 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதாகவும், சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை என்றும் அஸ்வினி உபாத்யாய் கூறியுள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறுபான்மையினரை அடையாளம் காண வழிகாட்டுதல்களை அமைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | சிரித்துக்கொண்டே என்ன பேசினாலும் குற்றம் அல்ல: உயர்நீதிமன்றம்
இது தொடர்பாக பதிலளித்த மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் தனது பதிலில், இந்து, யூதர், பஹாய் மதத்தைப் பின்பற்றுபவர்கள், அந்த மாநிலங்களில் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை நிறுவி நடத்தலாம் என்ற நிலையில், மாநிலத்திற்குள் சிறுபான்மையினராக அடையாளம் காண்பது தொடர்பான விஷயங்கள் மாநில அளவில் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மாநில எல்லைக்குள் உள்ள மத மற்றும் மொழிவாரி சமூகங்களையும் சிறுபான்மை சமூகங்களாக மாநில அரசு அறிவிக்கலாம் என்று சட்டம் கூறுகிறது என்று அமைச்சகம் கூறியது.
மத்திய அரசு. ‘பிரிவு 29 & 30ஐ உபயோகித்து, அந்தந்த மாநிலங்கள் (மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள்) இந்துக்களை மைனாரிட்டிகளாக அறிவிக்கலாம்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிரா அரசு மாநில எல்லைக்குள் யூதர்களை சிறுபான்மையினராக அறிவித்துள்ளதாகவும், கர்நாடக அரசு உருது, தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி, துளு, லாமணி, ஹிந்தி, கொங்கனி மற்றும் குஜராத்தி மொழிகள். இது சிறுபான்மை மொழியை அதன் வரம்பில் அறிவித்துள்ளது. எனவே சிறுபான்மை சமூகத்தினருக்கும் அரசு அறிவிக்கலாம்.
மேலும் படிக்க | வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR