2018-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமும் 2019ம் ஆண்டில் 7.4 சதவீதமும் இருக்க கூடும் என சர்வதேச நிதி ஆணையம் (IMF) கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2017ம் ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி தற்போது 2018-ம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 7.4 சதவீதமாக இருக்கும். முதலீடு அதிகரிப்பு காரணமாக ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல் ஆகியவை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதையே பொருளாதார வளர்ச்சி காட்டுகிறது.
பொருளாதாரம் வளரும் பட்சத்தில் உலகில் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். அத்துடன் இந்த பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சியானது 2018-ம் ஆண்டில் 0.7 சதவீதமும், 2019-ம் ஆண்டில் 1.2 சதவீதமும் அதிகரிக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.