நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சரத் பவார் அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்பட்டு வந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடக்கினார். மகாராஷ்டிராவின் மிக முக்கிய கட்சியில் ஒன்றாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் சென்ற ஆண்டு ஏற்பட்ட உட்கட்சி மோதலால், கட்சி இரண்டாகப் பிரிந்தது.
சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவர், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆன அரசில் இணைந்து கொண்டு துணை முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு, சரத் பவார், அஜித் பவார் இருவருமே உரிமை கொண்டாடி வந்த நிலையில், இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை அணுகி கட்சியின் சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் ஆணையம், தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நிலையில், பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, கட்சியின் நிர்வாகிகள் பெருமளவில் அஜித் பவர் பிரிவிற்கே ஆதரவு தருவதால் கட்சியின் சின்னம் அவருக்கே ஒதுக்கப்படும் என்று கூறி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமான கடிகாரம் சின்னத்தை அஜித் பவர் பிரிவிற்கு ஒதுக்கியுள்ளது. இந்த முடிவு சரத் பவாருக்கு ஒரு பெரும் பின்னடைவாகும்.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த சரத் பவாரின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன சுப்ரியா சூலே, எங்களிடம் ஆவணங்கள் சரியாக இருந்தும் இந்த முடிவு வந்தது மிகவும் வருந்தத்தக்கது. சரத் பவாரே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர். இதை விவாகரத்தை நாங்கள் நிச்சயம் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து செல்வோம் என்று கூறினார்.
மேலும் படிக்க | FD: 1001 நாட்களுக்கான முதலீட்டிற்கு 9.5% வட்டி... மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்...!
EC settles the dispute in the Nationalist Congress Party (NCP), rules in favour of the faction led by Ajit Pawar, after more than 10 hearings spread over more than 6 months.
Election Commission of India provides a one-time option to claim a name for its new political formation… pic.twitter.com/1BU5jW3tcR
— ANI (@ANI) February 6, 2024
தேர்தல் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியை தெரிவித்த அஜித் பவர் பிரிவினர், மும்பையில் உள்ள அஜித் அவரின் அலுவலகத்திற்கு வெளியே கூடி மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தனர். மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிசும், என்சிபி தலைவர் அஜித் பவரை வாழ்த்தினார்.
அஜித் பவாருக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், சரத் தவார் பிரிவினர் தங்களுக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக நீண்ட காலம் இருந்த சரத் பவர், சோனியா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடக்கினார்.
மகாராஷ்டிராவில் மிக முக்கிய கட்சியாக உருவெடுத்து, குறிப்பிடத்தக்க அளவில் தேர்தல் வெற்றிகளையும் பெற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் அவருக்கு அடுத்தபடியாக அவரது அண்ணன் மகன் அஜித் பவர், மற்றும் சுப்ரியா சூலை ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ