Adhir Ranjan Chaudhary Angry With Mamata Banerjee: வரும் லோக்சபா தேர்தலுக்கான வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் (India Alliance) கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது மம்தா பானர்ஜி கூட்டணியை விரும்பவில்லை என்றும், அவர் மோடிக்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளார் என்றும் கடுமையான வாரத்தைகளை பயன்படுத்தி உள்ளார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.
காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் (All India Trinamool Congress) மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்கிடையில் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு வெறும் இரண்டு மக்களவைத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் நினைப்பதாகத் தகவல் வெளியாகின.
நாங்கள் பிச்சை கேட்கவில்லை -ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
இந்தத் தகவலை அடுத்து, மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதுக்குறித்து பேசிய மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (Adhir Ranjan Chowdhury), "திரிணாமுல் காங்கிரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மம்தாவிடம் பிச்சை கேட்டது யார் என்று தெரியவில்லை. நாங்கள் பிச்சை கேக்கவும் இல்லை. பிச்சை எடுக்கவும் விரும்பமில்லை. கூட்டணி வேண்டும் என்று மம்தா தான் கூறி வருகிறார். மம்தாவின் கருணை எங்களுக்கு தேவையில்லை. காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மம்தா பானர்ஜி விரும்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு சேவை செய்வதில் அவர் மும்முரமாக இருப்பதாகத் தெரிகிறது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு பார்முலா என்ன?
நாடாளுமன்றத் தேர்தல் (Lok Sabha Elections) மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் (Assmbly Elctions) இரண்டு கட்சிகளின் வெற்றி மற்றும் வாக்கு சதவீதத்தை வைத்து, அதன் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு அமைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் 42 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் மால்டா சவுத் மற்றும் பெர்ஹாம்பூர் ஆகிய 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு 5.67 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது சிபிஐ (எம்) ஐ விடவும் குறைவு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6.33 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.
மேற்கு வங்காளத்தில் நாங்கள் சொல்வது தான் இறுதி முடிவு -திரிணாமுல் காங்கிரஸ்
அதேபோல 2019 தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் 43 சதவீத வாக்குகளைப் பெற்று 22 இடங்களை வென்றது. இத்தகைய சூழ்நிலையில், மேற்கு வங்காளத்தில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருக்க வேண்டும் என்றும், தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கும் உரிமை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
எதிர்க்கட்சிகளின் பிரதமர் முகமாக கார்கே -மம்தா விருப்பம்
முன்னதாக டிசம்பர் 19 அன்று, இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை (Mallikarjun Kharge), எதிர்கட்சிகளின் கூட்டணி பிரதமர முகமாக முன்னிறுத்த வேண்டும் என டிஎம்சி முன்மொழிந்தது. அதற்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்தார். எனினும், இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. தலித் சமூகத்தை சேர்ந்த கார்கே சிறந்த தேர்வாக இருப்பார் என்று திரிணாமுல் காங்கிரஸ் நினைக்கிறது. ஏனென்றால் நாடு முழுவதும் உள்ள தலித் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 58 மக்களவை தொகுதியில் அவரால் செல்வாக்கு செலுத்த முடியும் என நினைக்கிறது.
இந்தியா கூட்டணியில் சீட் பகிர்வு - ஒருமித்த கருத்து இல்லை
டிசம்பர் 31, 2023க்குள் இந்தியா கூட்டணியில் சீட் பகிர்வு விவரங்களை இறுதி செய்ய வேண்டும் என்று டிஎம்சி கோரியிருந்தது. எனினும் காலக்கெடு கடந்துவிட்டது. தற்போது வரை இந்தியா கூட்டணியில் இன்னும் சீட் பகிர்வில் ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
290 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு
வரவிருக்கும் 2024 தேர்தலில் தோராயமாக 290 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல். மேலும் ஜம்மு காஷ்மீர், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 9 மாநிலங்களில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் முடிவு.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ