தாவூத், D-கம்பெனிக்கு பாக்., அடைக்கலம் கொடுக்கிறது: இந்தியா குற்றசாட்டு!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலம் கொடுத்து மறைத்து வைத்திருப்பது குறித்து ஐ.நா.சபையில் இந்தியா பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ளது!

Last Updated : Jul 10, 2019, 10:11 AM IST
தாவூத், D-கம்பெனிக்கு பாக்., அடைக்கலம் கொடுக்கிறது: இந்தியா குற்றசாட்டு!  title=

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலம் கொடுத்து மறைத்து வைத்திருப்பது குறித்து ஐ.நா.சபையில் இந்தியா பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ளது!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார். இந்தியாவால் தேடப்படும் தாவூத் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக பல முறை ஆதாரத்துடன் கூறியும், பாகிஸ்தான் தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வருகிறது. 

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 10, 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு அலைகளின் பின்னணியில் பாகிஸ்தானில் மாஃபியா டான் திரும்பிய பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி-கம்பெனி பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. 

இது குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்திய தூதரும் ஐநா.வுக்கான இந்திய பிரதிநிதியுமான சையத் அக்பருதீன், இந்தியாவில் தங்கம் கடத்தல், கள்ளநோட்டு அச்சடித்தல், ஆட்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த தாவூத் இப்ராகிம் பின்னர் தீவிரவாத இயக்கமாக தனது டி கம்பெனியை மாற்றிக் கொண்டதாக குறிப்பிட்டார்.

அந்த இயக்கத்தின் சட்டவிரோத பொருளாதார நடவடிக்கைகள் குறித்து வெளியுலகம் அதிகம் அறிந்திருக்கவில்லை என்றும் உலக நாடுகளிடம் விளக்கினார். தாவூத்தை மறைத்து வைத்து அடைக்கலம் கொடுத்து வரும் அண்டை நாடு அப்படி ஒருவர் இருப்பதையே ஒப்புக் கொள்ள மறுக்கிறது.

இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக நீடிப்பதாகவும் சையத் அக்பரூதீன் தெரிவித்தார்.ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிராக உலகம் ஒன்று திரண்டது போல் தாவூத் மற்றும் ஹபீஸ் சையத் போன்றோருக்கு எதிராகவும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் சையத் வலியுறுத்தினார்.

 

Trending News