இந்திய பங்குச்சந்தை சிறிது நாட்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. Sensex தொடர்ந்து புதிய உச்சங்களைச் சந்தித்து வருகிறது. அதே நேரத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டும் ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளன. சென்செக்ஸ் 65300 என்ற அளவைத் தொட்ட நிலையில், நிஃப்டி 19340 என்ற அளவைக் கடந்துள்ளது. இதனால் சந்தையும் அதிக அளவிலான புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியும் இறுதியாக மிக அதிக அளவைக் குறிக்கும் பச்சை நிறத்தில் முடிவடைந்தது. தற்போது இந்திய பங்குசந்தை ஏற்றத்தில் காணப்படுவது முதலீட்டாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்செக்ஸ் (Sensex)
இன்று சென்செக்ஸில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 65 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் காணப்பட்டது. மறுபுறம், சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 65300.35 புள்ளிகளை எட்டியது. இந்த நிலை இப்போது சென்செக்ஸின் அனைத்து கால உயர்வாக உள்ளது. இறுதியாக, சென்செக்ஸ் 486.49 புள்ளிகள் (0.75%) உயர்வுடன் 65205.05 என்ற அளவில் முடிவடைந்தது.
நிஃப்டி (Nifty)
இதனுடன், நிஃப்டியும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. நிஃப்டி 19300ஐ கடந்தது. நிஃப்டி இன்று அதிகபட்சமாக 19345.10ஐ எட்டியது. இது நிஃப்டியின் ஆல் டைம் ஹையாகவும் ஆனது. அதே நேரத்தில், நிஃப்டியும் க்ரீன் மார்க்குடன் நிறைவடைந்துள்ளது. நிஃப்டி 133.50 புள்ளிகள் (0.70%) உயர்வுடன் 19322.55 அளவில் நிறைவடைந்தது.
மேலும் படிக்க | கிரிப்டோ கரன்சி மூலம் தீவிரவாதத்தை இந்தியாவில் வேரூன்ற முயற்சிக்கும் ISIS
அதிக லாபம் மற்றும் அதிக நஷ்டம்
அதே நேரத்தில் இன்று சந்தையில் பல பங்குகளில் ஏற்றம் காணப்பட்டது. கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பிபிசிஎல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டியுள்ளன. இது தவிர, பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட் கார்ப், சன் பார்மா, சிப்லா மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.
52 வார அதிகபட்சஅளவு
மறுபுறம், மும்பை பங்கு சந்தையில் 200க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை எட்டின. மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ், எஸ்ஜேவிஎன், என்டிபிசி, கர்நாடகா வங்கி, டாடா மோட்டார்ஸ், சுஸ்லான் எனர்ஜி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ், ஐஓசி, ஐடிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், பாங்க் ஆஃப் பரோடா மற்றும் அசோக் லேலண்ட் ஆகியவை அடங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ