ஜனவரி 5 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) வன்முறையில் ஈடுபட்ட முகமூடி அணிந்த பெண்ணை டெல்லி காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அடையாளம் கண்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5-ஆம் தேதி சில முகமூடி அணிந்த கும்பல் தடியுடன் வந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மாணவர் சங்க தலைவி ஆஷிஜோஸ் உள்பட 33 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் நடத்தியது இடதுசாரிகளும், அகில பாரதிய வித்யார்த்த பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பினரும் மாறிமாறி குற்றம்சாட்டினர்.
அந்தவகையில் கண்டனத்தை 10ஆம் தேதி ஜே.என்.யுவில் வளாகத்தில் வன்முறை செய்த 9 முகமூடி அணிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டி.சி.பி (க்ரைம்) ஜாய் டிர்கி தெரிவித்தார். அதில் 7 மாணவர்கள் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் 2 மாணவர்கள் வலதுசாரியை சேர்ந்தவர்கள். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களின் புகைப்படத்துடன் பட்டியல் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) வன்முறையில் ஈடுபட்ட முகமூடி அணிந்த பெண்ணை டெல்லி காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அடையாளம் கண்டுள்ளது. கையில் குச்சியும், முகத்தில் முகமூடியும் அணிந்திருந்த சட்டை அணிந்திருந்ததை போல வீடியோவில் அந்த பெண் காணப்பட்டார்.
அந்த பெண் டெல்லி பல்கலைக்கழகத்தின் Daulat Ram கல்லூரி மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். #JNU வன்முறையின் வீடியோக்களில் காணப்பட்ட முகமூடி அணிந்த பெண் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் என்பதை SIT குழு அடையாளம் கண்டுள்ளது. மேலும் அந்த மாணவியை விரைவில் விசாரணைக்கு அழைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.