கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
ஜிஜாப் அணிவது தொடர்பான மாணவிகளின் வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
Karnataka High Court dismisses various petitions challenging a ban on Hijab in education institutions pic.twitter.com/RK4bIEg6xX
— ANI (@ANI) March 15, 2022
தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் ஜேஎம் காஜி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஹிஜாப் வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களையும் இன்று (2022, மார்ச் 15, செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான மாணவிகளின் வழக்கு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல என்று தெரிவித்த கர்நாடக உயர்நீதிமன்ற சட்ட அமர்வு, ஹிஜாபுக்கு தடை விதித்தது செல்லும் என்று தெரிவித்தது.
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல என்றும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு... பெங்களூருவில் கூட்டம் கூட தடை
இன்று ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், பல்வேறு பிரிவினரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக அட்டர்னி ஜெனரல் பிரபுலிங் நவத்கி, “தனிப்பட்ட விருப்பத்தை விட நிறுவன ஒழுக்கமே மேலோங்கி நிற்கிறது. இந்த தீர்ப்பு அரசியலமைப்பின் 25வது பிரிவின் விளக்கத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது...” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகவிருந்த நிலையில், கர்நாடகாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொது இடங்களில் போராட்டங்கள் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும், கூட்டம் கூடவும் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையானது இன்று முதல் (2022 மார்ச் 15ந்தேதி முதல் மார்ச் 21ந்தேதி வரை) ஒரு வாரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: உடுப்பியில் பிப்ரவரி 14ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR