74 வது சுதந்திர தினத்தில், செங்கோட்டைக்கு அருகே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு (Anti-drone system) பயன்படுத்தப்பட்டது. பிரதம மந்திரி மோடி தனது சுதந்திர தின உரையை நிகழ்த்திய இடத்தில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, தனது சுதந்திர தின உரையில், அரசின் கடந்தகால சாதனைகளை பட்டியலிட்டு எதிர்காலத்திற்கான திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார்.
வான் வெளியில் இயக்கப்படும் ஆளில்லா சாதனங்களான ட்ரோன்கள், பெரும்பாலும் சிறிய அளவிலானவை. அவை தொலைதூரத்தில் இருந்து ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. தீவிரவாதிகள், சமூக விரோதிகள், வெடி மருந்துகளை எடுத்து செல்லவும் இந்த ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்
ALSO READ | சுதந்திர தின வரலாற்றில் முதல் முறையாக நயாகரா நீர்வீழ்ச்சியில் மூவர்ண கொடி பறக்கும்..!!!
DRDO உருவாக்கிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்பின் சிறப்பு அம்சங்கள்:
DRDO உருவாக்கிய இந்த அமைப்பு 3 கிலோமீட்டர் வரை உள்ள மைக்ரோ ட்ரோன்களைக் கண்டறிந்து அதனை செயலிழக்க செய்யும் திறன் கொண்டது. லேசர் ஆயுத வாட்டேஜை பொறுத்து 1-2.5 கிலோமீட்டர் வரை உள்ள ட்ரோன்களை அழிக்கும்.
DRDO உருவாக்கிய இந்த அமைப்பு , நொடியில் ட்ரோன் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அடையாளம் கண்டு அவற்றை செயலிழக்க செய்யலாம் அல்லது அழிக்கலாம்.
நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு படைபிரிவுகளில் ட்ரோன் அடிப்படையிலான நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
DRDO உருவாக்கிய இந்த அமைப்பு, பரிசோதனை செய்து பார்க்கப்பட்ட போது, வான் வெளிப்பகுதியில் வந்த மற்றொரு ட்ரோனை வெற்றிகரமாக அழித்தது.
The Anti Drone Masterpiece CHESS developed by @DRDO_India can track mini drones at a distance of 3 kms and waste it by jamming of command & control links or by damaging electronics of drones through laser-based Directed Energy Weapon .
Will be positioned at LAC and LOC pic.twitter.com/EH4hqxuCJt— Megh Updates (@MeghUpdates) August 15, 2020
ALSO READ | பணம் இல்லை.... ஒரே இரவில் 48 விமானிகளை வேலையை விட்டு நீக்கிய Air India..!!
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் போது பாதுகாப்பு வழங்குவதற்காக DRDO உருவாக்கிய ஆண்டி ட்ரோன் அமைப்பு முதலில் பயன்படுத்தப்பட்டது. குடியரசு தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மோடி-டிரம்ப் ரோட்ஷோவிற்காக அகமதாபாத்திலும் இந்த ஆண்டி ட்ரோன் அமைப்பு பயன்படுத்தப்பட்டது. இதன், மூலம் ட்ரோன்கள் மூலம் மேற்கொள்ளப்படும், எந்தவொரு வான்வழி தாக்குதல்கள், அச்சுறுத்தல்களை தடுக்க இயலும்.