புதுடெல்லி: சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை. பல்வேறு வடிவங்களில், பல்வேறு மாறுபாடுகளில் மாறி மாறி மக்களை அச்சத்தின் உச்சியிலேயே வைத்துள்ளது இந்த பெருந்தொற்று. இந்தியாவில் தினசரி கொரோனா எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை கடந்து இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு (Corona Lockdown) காரணமாக கடந்த 2 ஆண்டுகளில், குழந்தைகளிடையே (Corona Impact on Children) அதிக மன அழுத்தம் காணப்படுகிறது. கொரோனாவின் புதிய வகை (New variant of Corona) ஒமிக்ரானின் ஆபத்து குழந்தைகளை ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவின் தாக்கத்தை யாரேனும் அதிகம் பார்த்திருந்தால் அது சிறு குழந்தைகள்தான். உண்மையில், குழந்தைகளின் கல்வி முன்பு பள்ளியில் இருந்தது, ஆனால் கொரோனா காரணமாக, தற்போது அனைத்தும் ஆன்லைனில் நடைபெறுகிறது. இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகள் மனநல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
ALSO READ | கொரோனாவுக்கு சவால் விடும் மருந்து! வெறும் 35 ரூபாய் மட்டுமே!
குழந்தைகள் வீட்டில் எரிச்சல் அடைகிறார்கள்
மும்பையில் வசிக்கும் சர்மா குடும்பமும் கொரோனா காலத்தில் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறது. ஆஜேஷ் ஷர்மா என்பருக்கு குடும்பத்தையும் கொரோனா பாதித்தது. கொரோனாவுக்கு முன், பள்ளியில் படிக்கும் போது, நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த குழந்தை, தற்போது வீட்டில் அடைக்கப்படும்போது கோபமாகவும் எரிச்சலாகவும் மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.
மனநல மருத்துவர்களும் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பை ஒரு பிரச்சனையாக பார்க்கிறார்கள் என்று டாக்டர் சாகர் முந்தாரா கூறினார். மும்பையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் சாகர் முந்த்ரா கூறுகையில், கொரோனாவின் தாக்கம் இளம் குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது. குழந்தைகள் பல விஷயங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், இதனால் அவர்களின் மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் காணப்படுகின்றன.
குழந்தைகளை பிஸியாக வைத்திருப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்
அத்தகைய சூழ்நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பிஸியாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு சரியான நேரத்தை செலவிட வேண்டும், மன அழுத்தத்தை சமாளிக்க முடியாதவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நிபுணர்களின் உதவியை நாட வேண்டும்.
ALSO READ | கையில் தெரியும் ஒமிக்ரான் அறிகுறி! நகம் இப்படி இருந்தல் உடனே சிகிச்சை தேவை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR