சரும நிறத்தை வைத்து ஒருவரை எடைபோடும் பழக்கம் நம் நாட்டில் எப்போது போகும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. வெண்மை நிறம் அழகுக்கு சமமாகவும், அது இல்லாதவர்கள் அழகானவர்கள் அல்ல என்று கருதப்படும் எண்ணமும் நம் நாட்டில் இன்னும் பலரிடம் அப்படியேதான் உள்ளது.
ஹைதராபாதில் (Hyderabad) , செவ்வாய்க்கிழமை அதிகாலையில், தன் மனைவியின் சரும நிறம் (Dark Skin) குறித்த அதிருப்தியால் ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்ததாகவும், பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மியாபூர் பகுதியில் வசித்து வந்த இந்த தம்பதியினரிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அந்த நபர் தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்ததாகக் கூறப்படுகிறது.
“யோகி என்றழைக்கப்படும் யாகந்தையா மற்றும் அவரது மனைவி அருணா ஆகியோர் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தின் குண்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் பணி நிமித்தமாக ஹைதராபாத் வந்தார்கள்” என்று மியாப்பூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் கூறினார்.
இருவரும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு தம்பதியினரிடையே பல வேறுபாடுகள் வரத் தொடங்கின. குற்றம் சாட்டப்பட்ட கணவர், தன் மனைவியை அவரது மாநிறம் காரணமாக அவ்வப்போது குறை கூறி வந்ததாகத் தெரிகிறது. அவரது நிறம் அவருக்கு அழகான தோற்றத்தை அளிக்கவில்லை என யோகி அவ்வப்போது தன் மனைவியிடம் கூறி அவரை வார்த்தைகளால் துன்புறுத்தியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
ALSO READ: மீன் வெட்டும் கத்தியால் கணவரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த கொடூர மனைவி!!
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏற்கனவே ஒரு காதல் உறவு இருந்ததாகவும், அது தோல்வியுற்ற பின்னர், ஒரு உறவினர் அவரை அருணாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் நடந்த அன்று, கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த யோகி உணர்ச்சிப் பெருக்கில் தன் மனைவியைக் கொன்றதாகத் தெரிகிறது. பின்னர், அவர் தற்கொலை (Suicide) செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.
தற்போது யோகியின் உடல்நிலை மோசமாக உள்ளது என்று இன்ஸ்பெக்டர் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், விசாரணை நடந்து வருகிறது.
ALSO READ: ரத்த டெஸ்ட் எடுக்கவந்த பெண்ணை கற்பமாக்கிய லேப் டெக்னீசியன்..!