தில்லியில் குட்கா, பான் மசாலாவுக்கான தடை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது

தில்லியில் குட்கா மற்றும் பான் மசாலாவின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்திற்கான தடையை தில்லி அரசு மேலும் ஒரு வருடம் நீட்டித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2020, 03:11 PM IST
  • இந்த பொருட்கள் தடை செய்யப்படுவது குறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் டி என் சிங் புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டார்.
  • சிகரெட்டுக்கு எந்தத் தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பழக்கங்களை மக்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Trending Photos

தில்லியில் குட்கா, பான் மசாலாவுக்கான தடை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது title=

தில்லியில் (Delhi) குட்கா (Gutkha) மற்றும் பான் மசாலாவின் (Pan Masala) உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்திற்கான தடையை தில்லி அரசு (Delhi Government) மேலும் ஒரு வருடம் நீட்டித்துள்ளது. இந்த பொருட்கள் தடை செய்யப்படுவது குறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் டி என் சிங் புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டார்.

"கமிஷனர் (உணவு பாதுகாப்பு) மூலம், டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்தில் (NCT of Delhi)  ஒரு வருட காலத்திற்கு பொது சுகாதாரத்தின் நலனுக்காக இப்பொருட்கள் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வாசனை, சுவை சேர்க்கப்பட்ட அல்லது கூறப்படுள்ள சேர்க்கைகளுடன் கூடிய புகையிலையின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் அல்லது விற்பனை தடை செய்யப்படுகிறது. குட்கா, பான் மசாலா, சுவை / வாசனை புகையிலை, கர்ரா என எந்தப் பெயரிலும் இப்பொருட்களை விற்பனை செய்ய தடை உள்ளது.” என இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ : உயரும் டீசல் விலை, பெட்ரோல் விலையில் மாற்றமில்லை- இன்றைய (ஜூலை 17, 2020) நிலவரம்

தில்லி அரசாங்கத்தின் உணவு பாதுகாப்புத் துறை கடந்த நான்கு ஆண்டுகளாக குட்கா மற்றும் பான் மசாலா தடை குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

இருப்பினும், இங்கு சிகரெட்டுக்கு தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் விதிக்கும் தடை ஒருபுறம் இருக்க, மக்களுக்கும் இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும். உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பழக்கங்களை மக்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். சில நிமிட சந்தோஷத்திற்காக தன் வாழ்க்கையையும் தன் குடும்ப வாழ்க்கையையும் இன்னலில் தள்ளக்கூடாது.

Trending News