புட்காமில் ராணுவ வீரர் முகமது யாசீன் கடத்தப்படவில்லை; அவர் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்!!
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்CRPF வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது. இதையடுத்து, தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி, கொடுத்தது. இதை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்த சூழலில், ஜம்மு நகரில் உள்ள பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் குண்டு வெடித்ததில் 2 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து, பட்காம் மாவட்டம் காசிபோரா சந்தூரா என்ற இடத்தில் தனது வீட்டில் இருந்த முகமது யாசின் என்ற ராணுவ வீரரை நேற்று மாலை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக தகவல் வெளியானது.
Defence Ministry: Media reports of the abduction of a serving Army soldier(Mohammad Yaseen) on leave from Qazipora, Chadoora, Budgam(J&K) are incorrect. Individual is safe. Speculations may please be avoided. pic.twitter.com/oYKXoYVQGT
— ANI (@ANI) March 9, 2019
இந்த நிலையில், மேற்கண்ட தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருப்பதாகவும், இது தொடர்பான ஊகங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.