லிட்டருக்கு ரூ.100 ஆகிறதா பால் விலை? பெட்ரோல், LPG, அடுத்தது பாலின் விலை உயர்கிறதா?

மார்ச் 1 முதல் பால் லிட்டருக்கு ரூ .100 க்கு விற்கப்படும் என்று காப் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த முடிவு வெளியில் அல்லது டெய்ரியில் விற்கப்படும் பாலுக்கு மட்டுமே பொருந்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 28, 2021, 02:15 PM IST
  • மார்ச் 1 முதல் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ .100 செலுத்த வேண்டியிருக்குமா?
  • பாலை லிட்டருக்கு ரூ .100-க்கு விற்க முடிவு செய்துள்ளோம்-விவசாய சங்கங்கள்.
  • காய்கறிகளின் விலையையும் அதிகரிப்போம் என்று விவசாய சங்கங்கள் எச்சரிக்கை.
லிட்டருக்கு ரூ.100 ஆகிறதா பால் விலை? பெட்ரோல், LPG, அடுத்தது பாலின் விலை உயர்கிறதா? title=

பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளுக்குப் பிறகு, இப்போது பாலின் விலையும் அதிகரிக்கப்போகின்றதா? மார்ச் 1 முதல் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ .100 செலுத்த வேண்டியிருந்தால் மக்களின் நிலைமை என்னவாகும்? இப்படி கேட்கப்படுவதற்கு ஒரு காரணமும் உள்ளது. உண்மையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் பால் லிட்டருக்கு 100 ரூபாய் என விற்கப்படும் என்ற செய்தி சனிக்கிழமை காலை முதல் டிரெண்ட் ஆகி வருகிறது.

அப்படி நடந்தால், பெட்ரோல்-டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களுக்குப் பிறகு மக்களுக்கு இது மிகப்பெரிய அடியாக இருக்கும். இப்படி ஏன் சொல்லப்படுகிறது? இதற்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்று பார்க்கலாம்.

பாலின் விலை அதிகரிக்கும் என்ற செய்திக்குப் பின்னால் உள்ள காரணம் இதுதான்

உண்மையில், ஹரியானாவின் ஹிசாரில் உள்ள காப் பஞ்சாயத்து வேளான் சட்டங்களுக்கு எதிராகவும், அதிகரிக்கும் எண்ணெய் விலைகளுக்கு எதிர்ப்பு (Fuel Prices) தெரிவிக்கும் வகையிலும், பால் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மார்ச் 1 முதல் பால் லிட்டருக்கு ரூ .100 க்கு விற்கப்படும் என்று காப் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த முடிவு வெளியில் அல்லது டெய்ரியில் விற்கப்படும் பாலுக்கு மட்டுமே பொருந்தும். கிராமவாசிகளுக்கு பழைய விலையிலேயே பால் கிடைக்கும்.

ALSO READ: மத்திய அரசு மூன்று ஆண்டுகளுக்கு வேளான் சட்டங்களை இடைநிறுத்த வேண்டும்: பாபா ராம்தேவ்

ஒரு லிட்டர் பால் 100 ரூபாய்

ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தின் நர்னாண்ட் நகரத்தின் தானிய சந்தையில் சட்ரோல் காப்பின் பஞ்சாயத்து கூட்டத்திற்குப் பிறகு பால் விலையை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. சட்ரோல் காப்பின் பிரதிநிதி அளித்த தகவலில், “பாலை லிட்டருக்கு ரூ .100-க்கு விற்க முடிவு செய்துள்ளோம். அரசு கூட்டுறவு சங்கத்திற்கு இந்த விலையிலேயே பாலை விற்குமாறு பால் பண்ணை வைத்திருப்பவர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்று கூறினார்.

இது மேடையில் அறிவிக்கப்பட்டது

டெல்லி-ஹரியானாவின் சிங்கு எல்லையில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாரதீய கிசான் யூனியனின் அம்பாலா மாவட்டத் தலைவர் மல்கித் சிங், கடந்த நாட்களில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் மார்ச் 1 முதல் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பால் விலையை ரூ .50 ஆக உயர்த்த உள்ளனர் என்று கூறினார். மார்ச் 1 முதல் இந்த அதிகரிப்புக்குப் பிறகு, பால் லிட்டருக்கு 100 ரூபாயாக விற்கப்படும். இதனுடன், டீசல் விலையை அதிகரித்து அனைத்து தரப்பிலிருந்தும் விவசாயிகளை சுற்றி வளைக்க மத்திய அரசு (Central Government) முயற்சித்ததாகவும் மல்கித் சிங் கூறினார்.

இத்தகைய சூழ்நிலையில், யுனைடெட் கிசான் மோர்ச்சா இப்போது பால் விலையை 50 ரூபாய் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மூன்று வேளான் சட்டங்களையும் (Farmers Protest) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால், வரும் நாட்களில், போராட்டத்தை அமைதியாக தொடர்ந்து காய்கறிகளின் விலையையும் அதிகரிப்போம் என்று விவசாய சங்கங்கள் கூறியுள்ளனர். 

ALSO READ: பிப்ரவரியில் பணவீக்கம் தாக்கியது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News