NCC: 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய விரிவாக்கத் திட்டம்

அனைத்து எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களிலும் உள்ள இளைஞர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான National Cadet Corps (NCC)யின் மாபெரும் விரிவாக்க திட்டத்திற்கான  முன்மொழிவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2020, 03:21 PM IST
NCC: 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய விரிவாக்கத் திட்டம் title=

புதுடெல்லி: அனைத்து எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களிலும் உள்ள இளைஞர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான National Cadet Corps (NCC)யின் மாபெரும் விரிவாக்க திட்டத்திற்கான  முன்மொழிவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

அனைத்து எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களிலும் உள்ள இளைஞர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான National Cadet Corps (NCC)யின் மாபெரும் விரிவாக்க திட்டத்திற்கான  முன்மொழிவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

செங்கோட்டையில் நேற்று நாட்டிற்கு சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, NCCக்கான முன்மொழிவுத் திட்டங்களை அறிவித்திருந்தார்.

விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக, 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் ஒரு லட்சம் பேர் என்.சி.சியில் சேர்க்கப்படுவார்கள். அதில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் என்று கூறப்படுகிறது. என்.சி.சி அறிமுகப்படுத்தப்படும் எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில், இதற்காக ஆயிரத்திக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

"விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள கேடட்டுகளுக்கு என்.சி.சி பயிற்சி அளிக்க மொத்தம் 83 என்.சி.சி அலகுகள் (ராணுவம் 53, கடற்படை 20, விமானப்படை 10) மேம்படுத்தப்படும். எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள என்.சி.சி பிரிவுகளுக்கு, பயிற்சி மற்றும் நிர்வாக ரீதியிலான உதவிகளை ராணுவம் செய்துக் கொடுக்கும். கடலோரப் பகுதிகளில் உள்ள என்.சி.சி பிரிவுகளுக்கு கடற்படை தனது ஆதரவை வழங்கும், அதேபோல் விமானப்படை விமான நிலையங்களுக்கு அருகில் அமைந்துள்ள என்.சி.சி பிரிவுகளுக்கு விமானப்படை உதவி செய்யும்” என்று செய்தித் தொடர்பு  பணியகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புதிய திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் என்.சி.சி கேடட்டுகள், ராணுவப் பயிற்சி மற்றும் கடுமையான வாழ்க்கை முறைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள், ஆனால் ஆயுதப்படைகளில் சேர்வதற்கான உந்துதலை அவர்கள் பெறுவார்கள். மாநிலங்களுடன் இணைந்து என்.சி.சி விரிவாக்கத் திட்டம் கூட்டாக செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Also | இந்தியாவின் கோவிட் -19 ஆய்வு பரிசோதனைகளில் பூடான் இணைய ஆர்வம் காட்டும் ரகசியம் என்ன?

Trending News