தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது
இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும் வடக்கு மாநிலங்களில் வெப்ப நிலை குறைந்த பாடில்லை. இந்நிலையில் இன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடும் வெயில் வாட்டி வதைதுள்ளது.
இன்று 118.4 டிகிரி பாரன்ஹிட் (48 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானதாக இந்திய வானிமை மையம் தெரிவித்துள்ளது. டெல்லி வரலாற்றிலேயே இதுதான் உச்சப்பட்ச வெப்பம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சப்தர்ஜங் பகுதியில் 45 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவானதாவும், குறைந்தப்பட்சமாக 27.2 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவானதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரையில் பெரும்பாலான மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹிட்டிற்கு மேல் வெயில் பதிவானது. வெயில் தாக்கம் குறைய இன்னும் ஒருவார காலம் ஆகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.