NEET Paper Leak Allegations Latest News Updates: நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் முக்கிய விவகாரம் என்றால் அது தற்போது நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளும் அதன்பின்னர் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளும் எனலாம். இதுவரை நீட் தேர்வில் முறைகேடுகள் குறித்த விசாரணையில் தேர்வு எழுதியவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளது, இதில் மேலும் பரபரப்பை கூட்டியது. இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது.
நீட் என்பது மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஆகும். நீட் தேர்வு வேண்டாம் என தமிழ்நாடு கடந்த பல ஆண்டுகளாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த தேர்வு இந்தியாவின் பின்தங்கிய கிராம்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களின் வாய்ப்பை பறிக்கும் வகையில் இருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு கோரியும் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள் என பாஜகவை தவிர்த்து முன்னணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த நீட் விலக்கை கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட நீட் தேர்வு விலக்கு வேண்டி நடிகர் விஜய் ஒரு விழாவில் பேசியதும் வைராலனது.
நீட் தேர்வு முறைக்கேடுகள்
தமிழ்நாட்டில் நீட் விலக்கு தீவிரமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில் கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் பல இடங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையானது. 67 மாணவர்கள் முழு மதிப்பெண்களை பெற்றது, ஆள் மாற்றாட்டம் போன்றவையும் சர்ச்சையில் சிக்கின. பீகார் மாநிலத்தில் இதுகுறித்த குற்றச்சாட்டுகள் தீவிரமாக எழுந்தன. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.
மேலும் படிக்க | பெண்ணாக இருந்து ஆணாக மாறிய அரசு அதிகாரி! ஒப்புதல் அளித்த மத்திய அரசு!
இந்த சூழலில், நீட் தேர்வு முறைக்கேடுகள் குறித்து பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. கோடை விடுமுறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 8ஆம் தேதி அன்று திறக்கப்பட்ட நிலையில், அன்றே நீட் தேர்வு முறைக்கேடுகள் குறித்த அனைத்து மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் நீட் தேர்வின் வினாத்தாள்கள் ஒரே ஒரு இடத்தில் மட்டும் கசிந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
பூட்டுகள் ஏதும் உடைக்கப்படவில்லை
இந்த வழக்கில் தீவிர விசாரணை வேண்டும் எனவும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிற்கவைக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், நீட் மறு தேர்வு நடத்துவது என்பது கடைசி ஆப்ஷன்தான் என்றும் முறைக்கேடுகளில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரியாமல் மறு தேர்வு வைத்தோம் என்றால் தவறு செய்யாத லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஜூலை 9ஆம் தேதி நடந்த விசாரணையின்போது வழக்கின் விசாரணையை 11ஆம் தேதி ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணையின் நிலை குறித்து நேற்று அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
அது மட்டுமின்றி தேசிய தேர்வு முகமையும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த பிரமாண பத்திரத்தில், பீகார் தலைநகர் பாட்னாவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வினாத்தாள்கள் ஏதும் காணாமல் போகவில்லை என்றும் பூட்டுகள் ஏதும் உடைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பிரமாண பத்திரத்தில் தெரிவித்து என்ன?
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளில் பாட்னாவில்தான் முதலாவதாக சர்ச்சை உண்டானது. இதுவரை பீகார் தொடர்பாக மட்டும் 8 பேரை கைது செய்திருக்கிறது சிபிஐ. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீட் வினாத்தாள் கசிந்திருப்பதை ஒத்துக்கொண்ட தேசிய தேர்வு முகமை தற்போது அதற்கு நேர்மாறாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது பெரும் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது.
அந்த பிரமாண பத்திரத்தில்,"பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த எந்தவொரு பெட்டியில் இருந்து வினாத்தாள்கள் காணாமல் போகவில்லை. ஒவ்வொரு வினாத்தாள்களுக்கும் சீரியல் நம்பர் கொடுக்கப்பட்டு, அது குறிப்பிட்ட ஒரு தேர்வாளருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பூட்டுகள் ஏதும் உடைக்கப்படவில்லை. வழக்கத்திற்கு மாறான சம்பவம் ஏதும் நடத்தப்படவில்லை என தேசிய தேர்வு முகமையின் அதிகாரிகள் சமர்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த மையங்களின் சிசிடிவி வீடியோக்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வினாத்தாள் கசிந்தது தொடர்பாகவோ அல்லது வேறு அசம்பாவிதம் தொடர்பாகவோ எவ்வித சம்பவமும் பதிவாகவில்லை என குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன் - கர்நாடக பாஜக எம்.பி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ