தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா 17-வது மக்களவை சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.
17-வது மக்களவை சபாநாயகர் தேர்தலுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படதாக நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா புதிய சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நெருங்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேட்பாளராக பாஜக MP ஓம் பிரகாஷ் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா 17-வது மக்களவை சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பூண்டி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இரண்டுமுறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுகப்பட்ட ஓம் பிர்லா, முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்களின் இடத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
16-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த சுமித்ரா மஹாஜன் 8 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த தேர்தலின் போது 75-வயது ஆகும் சுமித்ரா மகாஜனுக்கு பாஜக தலைமையில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்குப்பட்ட நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் சுமித்ரா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இதுகுறித்து ஓம் பிரகாஷ் மனைவி அமித்தா பிர்லா-விடன் இதுகுறித்து வினவுகையில்., தனது கனவர் மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் மிகவும் மகிழ்சியடைவேன் எனவும், தனது குடும்பத்தாரும் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்குவர் எனவும் தெரிவித்திருந்தார்.