திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மனைவி அம்பிகா.
இந்த தம்பதியின் மகள்கள் ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி. இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்தனர்.
இந்தநிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டிய நிலையில், மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணத்தை நடத்தினர் பெற்றோர்.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி, ஒரே மேடையில் கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.
இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் (Pregnanacy) தரித்தனர். கர்ப்பமாக இருந்த இருவரும் தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பினர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு ஸ்ரீலெட்சுமிக்கும் வலி ஏற்பட்டு உள்ளது.
ALSO READ:ஒன்றாய் பிறந்தோம், ஒன்றாய் வெல்வோம்: இரட்டையர்களின் வினோத சாதனை!!
இதையடுத்து அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மாலை 6.45 மணிக்கு ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இரு குழந்தைகளும் 'ஓ' பாசிட்டிவ் என்ற ரத்த வகையில் பிறந்துள்ளன.
இரட்டை குழந்தைகள் (Twins) என்றாலே ஒரு வீட்டில் இரட்டை மகிழ்ச்சிதான். அதுவும் அவர்களது வாழ்க்கையில் இத்தனை முக்கியமான நிகழ்வுகள் ஒன்றாக நடந்தால், அதைப் பற்றி கேட்கவே வேண்டாம்! இந்த கேரள இரட்டை சகோதிகரிகளின் குடும்பங்களிலும் அந்த மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்றால் அது மிகையல்ல!!
ALSO READ:Travel pass: அரசுப் பேருந்துகளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு பயணம் என்றென்றும் இலவசம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR