ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதி சுட்டுக் கொலை...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் இந்திய இராணுவத்தின் மற்றும் சிறப்புப்படை காவல்துறையினர் இப்பகுதியில் ஒரு வளைவு மற்றும் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. படைகள் அந்த இடத்தை நெருங்கியபோது, அந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸார் இணைந்து சம்மந்தப்பட்ட பகுதியை சுற்றிவளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர். இதையடுத்து, பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதியை காவல்துறையினர் குட்டுக்கொண்டனர். இதில், ஒரு சிறப்பு காவல்துறை அதிகாரியும் (SPO) இந்த என்கவுண்டரில் உயிர் இழந்தார், இது இப்போது முடிவடைந்துள்ளது.
#UPDATE Baramulla encounter: One Special Police Officer (SPO) lost his life in the encounter, one terrorist has been gunned down. The encounter has concluded. #JammuAndKashmir https://t.co/SzhyNCvob1
— ANI (@ANI) August 21, 2019
மேலும், அவர்களின் வசமிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகள் பதுங்கி இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுவதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.