நாளை வெளியாக உள்ள பத்மாவத் திரைப்படத்துக்காக குஜராத்,ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் கலவர பூமியாக மாறியுள்ளது. பல இடங்களில் தொடர் போராட்டம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களும் நடத்தி வருகின்றனர்.
#WATCH: Protesters torched bus and pelted stones in protest against #Padmaavat at Gurugrams' Sohna Road. #Haryana pic.twitter.com/B13t6l8XuI
— ANI (@ANI) January 24, 2018
நாளை வெளியாக உள்ள பத்மாவத் படத்துக்கு எதிராக குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் தீவிரமாடைந்துள்ளது. இதையடுத்து, அனைத்து பகுதிகளும் தீயினால் சூழ்ந்து காணப்படுகிறது.
Rajasthan: Protests staged in the area near Chittorgarh Fort in protest against #Padmaavat pic.twitter.com/Sybospb4u6
— ANI (@ANI) January 24, 2018
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான `பத்மாவத்' படம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்தப் படம் நாளை (ஜனவரி 25–ம் தேதி) வெளியாகிறது. ஆனால் ‘பத்மாவத்’ படத்துக்கு குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு அகற்றி கடந்த 18–ந் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, இத்திரை படம் வெளியாவதை தொடர்ந்து கர்னி சேனா அமைப்பினர் பல இடங்களில் தொடர் போராட்டம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களும் நடத்தி வருகின்றனர்.இந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து எராளமா தியேட்டர் சூறையாடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அப்பகுதில் உள்ள எராளமான வாகனங்களை போராட்டகார்கள் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும்,அகமதாபாத்தில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள் அங்கு இருந்த இரு சக்கர வாகனங்களையும் போராட்டகாரர்கள் அடித்து நொறுக்கினர்.
Ticket counter of Indra Cinemas in Jammu has been vandalized, an eyewitness says protesters raised slogans against the movie #Padmaavat pic.twitter.com/vCy5pGkaNc
— ANI (@ANI) January 24, 2018
இதில் எராளமான பொது சொத்துகள் கருகி நாசாமாகியுள்ளனர். ஆனால், இது வரை இந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து, பத்மாவத் திரைப்படம் நாளை வெளியாகுமா என்ற கேள்வி மக்களிடையே நிலவி வருகின்றது.
#Visuals from Haryana: Protesters pelted stones & torched a bus at #Gurugram's Sohna Road in protest against #Padmaavat pic.twitter.com/I7Bb4DHuxW
— ANI (@ANI) January 24, 2018