சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அதில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
உலகின் முக்கியம்வாய்ந்த அரசியல் தலைவர்கள், சிந்தனையாளர்கள் தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்கள் பங்கேற்க உள்ள இந்த உக பொருளாதார மன்ற கூட்டத்தில் 'உலக நிலை' குறித்த சிறப்புரையை இன்று ( ஜனவரி 17, 2022) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) சிறப்புரை ஆற்றுவார்
உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் நிகழ்வில் சுற்றுபுறசூழல், மக்கள் சுகாதாரம் மற்றும் ஏனைய உலக பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்படும்.
உலக பொருளாதார மன்ற கூட்டம், 2022 ஜனவரி 17 முதல் 21 வரை நடைபெறும். ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுவா ஓன் டேர் லயன், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் உரையாற்ற உள்ளார்கள்.
ALSO READ | தடுப்பூசி இயக்கத்தில் பங்காற்றிய அனைவரையும் வணங்குகிறேன்: பிரதமர் மோடி
சர்வதேச அமைப்புகள், மூத்த தொழில் துறை தலைவர்கள் மற்றும் சமுதாய சங்கங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியில் உலகம் இன்றைக்கு எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து அவர்கள் விவாதித்து அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்.
ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR