ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படும் நிலையில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுகிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370-வது பிரிவை 2019-ல் மத்திய அரசு ரத்து செய்த பிறகு, பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு செல்வது இதுவே முதல் முறை.
ஜம்மு பயணத்தின் போது, ரூ.3,500 கோடி செலவில், வாணி கால் குவாசி கண்ட் சாலையில் கட்டப்பட்டுள்ள சுரங்க பாதையை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இந்த சுரங்கப்பாதை ஜம்முவிற்கும் காஷ்மீருக்கும் இடையேயான இடையே அனைத்து பருவ நிலையிலும் தொடர்பை ஏற்படுத்த உதவும்.
மேலும் படிக்க | நாட்டிற்கு எதிரான சதியை முறியடிக்க எல்லை தாண்ட தயங்க மாட்டோம்: ராஜ்நாத் சிங்
இது தவிர இந்தப் பயணத்தின்போது ரூ. 20,000 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டவுள்ளார். அம்ரித் சரோவர் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் செல்லும் நிலையில், முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டது. லலியானா கிராமம் ஜம்மு மாவட்டத்தில் உள்ள பிஷ்னா தாலுகாவில், பிரதமர் மோடி உரையாற்றும் இடத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் வெடிப்பினால் பள்ளம் ஏற்பட்ட நிலையில், அது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலியானா கிராமம் பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக பேர் பெற்ற கிராமம் என்று கூறப்படுகிறது.
மேலும், கடந்த வெள்ளிக்கிழமை சுஞ்ச்வானில் பாதுகாப்புப் பணியாளர்களுடன் சென்ற பேருந்து மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார் மேலும் பலர் காயமடைந்தனர். இரண்டு ஜெய்ஷ் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், பயங்கரவாதிகளில் ஒருவர் தற்கொலை அங்கி அணிந்திருந்ததாகவும், நகரில் தற்கொலை படை தாக்குதலை நடத்த திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | பாஜகவிடம் நல்ல விஷயங்களும் உள்ளன...காங்கிரசிற்கு அதிர்ச்சி அளித்த ஹர்திக் படேல்
மேலும் படிக்க | 34 லட்சம் பயனாளிகளுக்கு 3628 கோடி ரூபாய் கடன் வழங்கிய பிரதமர் ஸ்வநிதி திட்டம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR