குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை பிரதமர் மோடி இன்று சிம்லாவில் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் சிறு நகரங்களுக்கு இடையில் குறைந்த கட்டணத்தில் விமான போக்குவரத்தை ஏற்படுத்துவதே உடான் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
2,500 ரூபாய்க்குள்ளான பயணக்கட்டணம் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட உதான் விமான சேவை திட்டத்திற்கு கடந்தாண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு மணி நேரத்திற்குட்பட்ட அல்லது 500
கிலோமீட்டர் தொலைவுக்குட்பட்ட விமானப் பயணங்களுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ 2500 வசூலிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மிகக்குறைவாக பயன்படுத்தப்படும் 12 விமான நிலையங்கள், பயன்படுத்தப்படாமல் உள்ள 31 விமான நிலையங்களை உள்ளடக்கி, 70 விமான நிலையங்களை இணைக்கும் வகையில், 128 வழித் தடங்களில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் முதல் விமானத்தை இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
'இனி விமானச் சேவை, அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாறும்' என்று டிவிட்டரில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
UDAN makes air travel accessible to a wider range of citizens & enhances connectivity with many more airports across India. pic.twitter.com/X2wVIq6130
— Narendra Modi (@narendramodi) April 27, 2017
Inaugural UDAN flights on Kadapa–Hyderabad and Nanded-Hyderabad sectors will also be flagged off. pic.twitter.com/dHBPL1r3UQ
— Narendra Modi (@narendramodi) April 27, 2017